கடைசி மேட்ச்ல மும்பை தோத்தா இதான் நடக்கும்.. எந்த அணியும் இடம்பிடிக்காத மோசமான சாதனை பட்டியல்..

ஐபிஎல் தொடர் என வந்துவிட்டாலே கம்பீரமாக நடை போட்டு பிளே ஆப் முன்னேறுவதுடன் மட்டும் இல்லாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றுவதே பழக்கமாக வைத்திருந்த அணிகளில் ஒன்று தான் மும்பை இந்தியன்ஸ். ரோஹித் ஷர்மா தலைமையில் கடந்த சீசன் வரை ஆடி வந்த மும்பை இந்தியன்ஸ் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

இவர்கள் இறுதி போட்டிக்கு வந்து விட்டார்கள் என்றாலே ஏறக்குறைய ஐபிஎல் கோப்பை உறுதி என்று நாம் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்டிங், பௌலிங் என அனைத்திலுமே அசைத்துப் பார்க்க முடியாத வீரர்கள் பலர் உள்ளனர்.

அப்படி இருந்தும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று சீசனில் கோப்பையின் வெல்லும் வாய்ப்பை கைவிட்டிருந்தது. மேலும் நடப்பு சீசனில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்கி இருந்த சூழலில் நிச்சயம் இந்த முறை சிறப்பாக கம்பேக் கொடுக்கும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த முறையும் தொடர் தோல்விகளால் துவண்டு போன மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் இருப்பதுடன் மட்டுமல்லாமல் பிளே ஆப் முன்னேறும் வாய்ப்பை ஒரு சில போட்டிகளுக்கு முன்பே இழந்து விட்டது. இந்த ஐபிஎல் சீசனிலேயே மும்பையில் இருக்கும் வீரர்கள் போல மற்ற எந்த அணிகளுக்கும் அமையாத ஒரு நிலையிலும் கூட ஒரு அணியாக ஒன்றிணைந்து அவர்களால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.

அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்பாக மிக மெகா ஏலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நிச்சயம் தங்கள் அணியில் சிறந்த வீரர்களை தேர்வு செய்வதுடன் மட்டுமில்லாமல் ஒரு அணியாக சிறந்த ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்தி கோப்பை கைப்பற்ற முயற்சி செய்வார்கள் என்றும் தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசனில் லக்னோவுக்கு எதிராக இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கிறது.

இதில் லக்னோ அணி நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால் ஒருவேளை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற சிறிய வாய்ப்பு உருவாகலாம் என்று தெரிகிறது. ஆனால் அதே வேளையில் மும்பை அணி இந்த போட்டியில் தோல்வியடைந்தால் ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த அணிகளும் சந்திக்காத ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்கள்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மும்பை அணி புள்ளி பட்டியலில் 10 வது இடத்தை பிடித்திருந்தது. தொடர்ந்து தற்போது கடைசி இடத்தில் இருக்கும் மும்பை அணி லக்னோவுக்கு எதிராக தோல்வி அடைந்தால் மீண்டும் ஒருமுறை பத்தாவது இடத்தை பிடிப்பார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டு முறை புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்த ஒரே அணி என்ற மோசமான சாதனையும் மும்பை வசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 10 அணிகளாக மொத்தம் 5 சீசன்கள் தான் ஐபிஎல் தொடர் நடந்திருக்கும் என்ற நிலையில் மும்பைக்கு இப்படி ஒரு நிலை வரலாம் என்றும் தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...