தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு நெத்தியடி பதிலைக் கூறிய இசைஞானி இளையராஜா…

இசைஞானி இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பார்களுள் ஒருவர். 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி ஆகிய மொழிகளில் 1000 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசைஞானி இளையராஜா அவர்கள், நாட்டுப்புற இசை, கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் முறையான பயிற்சியும் புலமையும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை வென்றவர். இவரின் இயற்பெயர் ‘ஞானதேசிகன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது இசைஞானி இளையராஜா அவர்களுக்கு கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இவரது இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் என்பது குறிபிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக இளையராஜா அவர்கள் தான் உருவாக்கிய ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் பாடலை என் அனுமதியின்றி தயாரிப்பாளர்கள் பயன்படுத்தி விட்டார்கள் என காப்பிரைட் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகமே பேசும் பொருளானது. இளையராஜா அவரைகளை பலர் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சித்தனர்.

தற்போது அந்த விமர்சனங்களைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் இசைஞானி இளையராஜா. அவர் கூறியது என்னவென்றால், கடந்த ஒரு மாதமாக என்னை பற்றி வந்த விமர்சங்களைக் நெருங்கியவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். நான் அதில் கவனம் செலுத்தவில்லை மாறாக இந்த ஒரு மாத காலத்திற்குள் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்று கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தன்னை பற்றி விமர்சித்தவர்களுக்கு நெத்தியடி பதிலை கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews