ஆப்பிள் ஸ்டோரால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் முகேஷ் அம்பானி.. ஒரு ஆச்சரியமான தகவல்..!

இந்தியாவில் சமீபத்தில் மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரண்டு இடங்களில் ஆப்பிள் ஐபோன் ஷோரூம் திறக்கப்பட்டது என்பதும் இந்த ஷோரூம் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உள்ளது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் எந்த விதமான பங்குதாரரும் இல்லாமல் பிராண்ட் அம்பாசிடரும் இல்லாமல் முகேஷ் அம்பானி ஆப்பிள் ஸ்டோர் மூலம் கோடி கணக்கில் பணம் சம்பாதித்து வருவதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானிக்கு சொந்தமான மால் ஒன்றில் தான் ஆப்பிள் ஷோரூம் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஷோரூம் 20 ஆயிரத்து 800 சதுர அடி கொண்டது என்பது 11 வருடத்திற்கு முகேஷ் அம்பானியிடம் ஒப்பந்தம் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடை வாடகை ரூபாய் 42 லட்சம் என்றும் கடையின் வாடகை ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் 15 சதவீதம் அதிகரிக்கும் என்றும் அது மட்டுமின்றி வருவாய் பங்களிப்பாக இரண்டு சதவீதம் ஆப்பிள் ஷோரூம் கொடுக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆப்பிள் நிறுவனம் ஒரு மாதத்திற்கு சுமார் 25 கோடிக்கும் அதிகமான விற்பனையை செய்து வரும் நிலையில் ஒவ்வொரு மாதமும் முகேஷ் அம்பானிக்கு 50 லட்சம் வருவாய் பங்காகவும் 42 லட்சம் வாடகை செலுத்தி வருகிறது என்றும் இதை இரண்டும் சேர்த்தால் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் நெருங்கி வருகிறது என்றும் கூறப்படுகிறது.

மும்பையின் மேற்கு நுழைவாயிலுள்ள ஜியோ வேர்ல்ட் என்ற மாலில் தான் இந்த ஆப்பிள் ஷோரூம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாந்திரா ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள இந்த ஆப்பிள் ஷோரூமில் ஆப்பிள் ஐபோன், மேக் ஐபேட், ஏர் பாட்ஸ், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி என அனைத்து சாதனங்களும் சில்லறை விற்பனைக்கு கிடைக்கிறது என்று நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 20 மொழிக்கு மேல் பேசும் ஊழியர்கள் இந்த ஷோரூமில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஷோரூம் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவச வைபை மற்றும் அனைத்து ஆப்பிள் தயாரிப்புகளும் தங்கு தடையின்றி வழங்கும் சேவை கிடைக்கிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் அனைத்து பொருட்களையும் வாங்கும் வசதியை கொண்டுள்ளனர் என்பதால் மிகப்பெரிய அளவில் வியாபாரம் வருகிறது. இந்த வியாபாரத்தை பொறுத்து முகேஷ் அம்பானிக்கும் வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...