அவர் பாடல… பேசுறார்.. சந்திரபாபுவின் வாய்ப்பை கெடுத்த எம் எஸ் விஸ்வநாதன்.. மோதலுக்கு பின் இப்படி ஒரு நட்பா..?

MS Viswanathan – JP Chandrababu: ஜே பி சந்திரபாபு மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். ஆனால் இவர்களது நட்பு மோதலில் தான் தொடங்கியது என்பது பலரும் அறியாத ஒன்று. சந்திரபாபு ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராகவும் பிரபல பாடகராகவும் இருந்தவர்.

அன்னபூரணி முதல் ஃபைட் கிளப் வரை சமீபத்திய படங்கள் தோல்வியடைய என்ன காரணம்? ப்ளூ சட்டை மாறன் விளக்கம்!

இவர் முதல் முறையாக ஜுபிடர் பிக்சர்ஸில் பாடகராக வாய்ப்பு கேட்டு சென்றிருந்தார். அப்போது எஸ் எம் சுப்பையா நாயுடு எம் எஸ் விஸ்வநாதனிடம் சந்திரபாபு எப்படி பாடுகிறார் என்று பார்க்குமாறு கூறிவிட்டு சென்று விட்டார். அதனால் எம் எஸ் விஸ்வநாதன் டியூன் போட ஜே பி சந்திரபாபு பாடல் பாடினார்.

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து எஸ் எம் சுப்பையா நாயுடு வந்து சந்திரபாபு எப்படி பாடுவதாக கேட்டார். அதற்கு எம் எஸ் விஸ்வநாதன் எங்கே பாடுகிறார் பேசுகிறார் அதுவும் சிலோன் தமிழில் பேசுகிறார் என்று கூறிவிட்டார்.

இந்த பாடகர் தான் வேண்டும் என நடிகர் திலகம் சிவாஜி அடம் பிடித்த பாடகர்!

இதைக் கேட்ட உடனேயே சந்திரபாபுவுக்கு இவர் தனது வாய்ப்பை கெடுத்துவிட்டார் என்பது புரிந்து விட்டது. அதே போன்று எஸ் எம் சுப்பையா நாயுடுவும் நன்றாக பயிற்சி எடுத்து விட்டு வந்தால் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அனுப்பி விட்டார்.

அதன் பிறகு தான் சந்திரபாபு மிகப்பெரிய பாடகர் ஆனார். அப்போது சந்திரபாபுவும் எம்.எஸ். விஸ்வநாதனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். எம் எஸ் விஸ்வநாதனுக்கு கண்ணதாசன் சந்திரபாபு ஆகிய இருவர்கள் தான் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

தளபதி 68 படத்தில் இணைந்த இரண்டு பாடகர்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை குறித்த மாஸ் அப்டேட்!

அதிலும் சந்திரபாபுவின் நட்பு என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சான்று உள்ளது. அவர் இறந்த பிறகு அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்கு முன்பு எம் எஸ் விஸ்வநாதன் வீட்டில் ஒரு மணி நேரமாவது தனது உடலை வைக்க வேண்டும் என்று கூறிவிட்டு சந்திரபாபு இறந்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...