அந்த விழாவுல போயி இப்படியா பேசுவாரு நாகேஷ்..! ஆனாலும் சமாளிக்கிறதுல மனுஷன் கில்லாடி தான்!

நகைச்சுவை மன்னன் நாகேஷ் எம்ஜிஆர் படங்களில் வந்து துள்ளிக் குதித்து காமெடியில் பட்டையைக் கிளப்பியவர். இவர் ஒருமுறை திருச்சி தில்லை நகரில் அருளானந்தர் கோவில் திருப்பணி நிதிக்காக நடந்த நாடக விழாவில் நாகேஷ் சிரிப்புடன் சிந்தனையைக் கலந்து பேசி அசத்தினார்.

நாய் முன்னால முழுத்தேங்காயை உருட்டுனா எப்படி இருக்கும். அது மாதிரி தான் இருக்கு. அதுக்கு வேற ஒண்ணும் செய்யத் தெரியாதுன்னு அசால்டா சொல்லிட்டாரு நாகேஷ்..! தமிழ்சினிமாவில் இவர் நடிக்க வந்த காலகட்டத்தில் சுவாரசியமான மேனரிசங்களாலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.

இவர் காட்சிகளில் வந்ததுமே அவர் காமெடி செய்யும் முன்பே நாம் சிரிக்க ஆரம்பித்து விடுவோம். அந்த அளவுக்கு நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தவர் தான் நாகேஷ். இவர் படத்தில் தான் இப்படி. நிஜவாழ்க்கையில் தத்துவங்களை அள்ளி வீசுபவர். அப்படித்தான் இந்த விழாவிலும் நடந்தது. வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

நான் இங்க நிற்கிறதால உங்களை விட உசத்தி இல்ல. குழந்தையைத் தகப்பன் தோள்ல வச்சிக் கொஞ்சுவான். அதுக்காக குழந்தை உயர்ந்தது ஆகிவிடாது. ரசிகர்களும் இப்படித் தான். நீங்க இல்லாம நான் கிடையாது.

Nagesh
Nagesh

கோயில் திருப்பணியில் நடைபெறும் நாடகத்திற்குத் தலைமை தாங்க என்னைக் கூப்பிட்டீங்க. அந்த வகையில் நான் சாதாரண சினிமா நடிகன். என்னைக் கூப்பிடணும்னு தேவையில்ல.

ஆனாலும் நீங்க எத்தனை தடவை கூப்பிட்டாலும் வருவேவன். எனக்கு போலீஸ் பாதுகாப்பு போட்டு ஏசி ரூம்ல பெரிய ஓட்டல்ல தங்க வச்சீங்க. எனக்கே இவ்வளவு செய்யும்போது ஆண்டவனுக்கும் நல்லா செய்யுங்க.

சவுக்கு மரங்களை சாரம் கட்டித் தான் கட்டட வேலையைச் செய்வாங்க. அந்த வேலை முடிஞ்சதுன்னா அதை எல்லாம் ஓரமா தூக்கிப் போட்டுருவோம். அதே நேரம் கட்டட வேலைல எந்தப் பங்கும் பெறாத வாழை மரத்தைக் கொண்டு வந்து அங்கே கட்டி வைப்போம்.

இந்த கோவில் திருப்பணிக்காக இரவு பகலாகப் பாடுபட்டு உழைக்கிறவங்களுக்கு முதல்ல நன்றி. இதை சொல்றதுக்கு பதிலா எதை எதையோ பேசிவிட்டேனே… என்று நெகிழ்ந்து விட்டார் அந்த நகைச்சுவை மன்னன்.

அன்பே வா, குடியிருந்த கோயில், உலகம் சுற்றும் வாலிபன், ஆயிரத்தில் ஒருவன், அரசகட்டளை, ஆசை முகம், பணக்கார குடும்பம், பெரிய இடத்து பெண் ஆகிய படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்துக் கலக்கியிருப்பார் நாகேஷ்.

ஒவ்வொரு படத்திலும் வேற லெவலில் காமெடி காட்டி அசத்துவதில் நாகேஷ் கில்லாடி. அதே போல சிவாஜியுடன் திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்த காட்சியை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. அவரைத்தவிர வேறு யாராலும் அந்தக் கேரக்டரில் நடிக்க முடியாது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...