இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் பண்ணினா நல்லா இருக்கும்… செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் நடிப்பேன்… சோனியா அகர்வால் பகிர்வு…

நடிகை சோனியா அகர்வால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் அறிமுகமாகிய ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் திரைப்படமே சோனியா அகர்வாலுக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது. இந்த திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதைப் பெற்றார். அதே ஆண்டே இவர் நடிப்பில் வெளியான ‘கோவில்’ திரைப்படமும் மாபெரும் வெற்றிப் பெற்றது. இத்திரைப்படத்தின் நாயகனாக நடிகர் சிம்பு நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மதுர’, ‘புதுப்பேட்டை’, ‘ஒரு கல்லூரியின் கதை’, ‘திருட்டு பயலே’, ‘அயோக்கியா’ போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் சோனியா அகர்வால்.

‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் இயக்குனரான செல்வராகவன் அவர்களை காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் மூன்று ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவகாரத்துப் பெற்று பிரிந்து விட்டனர்.

இந்நிலையில், தற்போது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார் சோனியா அகர்வால். ரசிகர்கள் எந்த படம் ரீ- ரிலீஸ் ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, நான் நடித்த ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் ரீ- ரிலீஸ் ஆனால் நன்றாக இருக்கும் என்று பதிலலித்துள்ளார். அதே போல் செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பீர்களா என்று ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு நல்ல கதையாக இருந்தால் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார் சோனியா அகர்வால்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...