தளபதி 68 படத்தில் இணைந்த இரண்டு பாடகர்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை குறித்த மாஸ் அப்டேட்!

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து தற்பொழுது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். லியோ படம் வெளியிட்டிருக்கும் முன்பே தளபதி 68 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில ஆக்சன் காட்சிகள் முதலில் படமாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற முடிந்தது. அதில் பிரம்மாண்ட சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் அந்த படப்பிடிப்பில் தளபதி விஜய் மற்றும் மைக் மோகன் கலந்துள்ளதாகவும் சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது.

இதனை அடுத்து மீண்டும் சென்னையில் நடைபெற்ற தளபதி 68 படப்பிடிப்பு இப்போது துருக்கியின் இஸ்தான்பில் நகரில் தொடர்ந்து நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புத்தாண்டு ஸ்பெஷலாக தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தளபதி 68 டைட்டில் மற்றும் விஜயின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வழியாக என சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரிய உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே இன்னொரு முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் தளபதி 68 படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இப்படத்தில் ஒரு பாடல் ரெக்கார்டிங் முடிந்து விட்டதாகவும், இந்த பாடல் தர லோக்கலில் அதிரும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 படத்தின் பூஜையின் போதே அந்த படத்தில் நடிக்கக்கூடிய பிரபல நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் தளபதி 68 படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபல நடன இயக்குனர் பிரபு தேவா, முன்னணி நடிகை சினேகா, நடிகை லைலா, மலையாள நடிகர் ஜெயராம், யோகி பாபு என இந்த படத்தில் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

தாஜ்மஹாலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.. அதில் யார் ஹீரோ தெரியுமா!

மேலும் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க உள்ளார். மேலும் படத்தில் வெங்கட் பிரபுவின் தம்பிகளான பிரேம்ஜி, அஜ்மல், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் இணைந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தில் இன்னும் சில பிரபலங்கள் இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது அந்த வகையில் இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜி அவர்களின் தந்தையான கங்கை அமரன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இந்த படத்திற்காக ஒரு பாடல் எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதை அடுத்து தளபதி 68 படத்தில் புதிய வரவாக நடிகர் மற்றும் பாடகர் யுகேந்திரன் இணைந்துள்ளா.ர் படத்தில் அவருக்கு முக்கியமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பாச்சி என்ற படத்தில் இந்த கூட்டணி இணைந்திருந்த நிலையில் தற்போது 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது. தளபதி விஜய் மற்றும் யுகேந்திரன் கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வெங்கட் பிரபு தேர்வு செய்த 4 டைட்டிலில் இருந்து தளபதி விஜய் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், படத்தின் டைட்டில் எம் அல்லது எஸ் என்ற வார்த்தைகளில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.