சினிமாவில் ஜாதியை சொல்பவன் ஒழிக்கப்பட வேண்டியவன்… இயக்குனர் பிரவீன் காந்தி ஆவேசம்…

பிரவீன் காந்தி தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 1997 ஆம் ஆண்டு ‘ரட்சகன்’ திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நாகார்ஜூனா, சுஷ்மிதா சென் ஆகியோரை வைத்து எடுக்கப்பட்ட ‘ரட்சகன்’ திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ‘ஜோடி’ திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் பிரஷாந்த் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் நல்ல விமர்சங்களைப் பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. இப்படத்தின் பாடல்களும் மெகாஹிட் ஆனது. பிரஷாந்த்- சிம்ரன் ஜோடியை அந்த நேரத்தில் மக்கள் கொண்டாடினர். பின்னர் அஜித்குமார் ,ஐஸ்வர்யா ராயை வைத்து ‘அபூர்வன்’ என்ற படத்தை இயக்க திட்டமிட்டார் பிரவீன் காந்தி. ஆனால் அது நிறைவேறவில்லை.

அதைத் தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு மறுபடியும் பிரஷாந்த் மற்றும் ஜோதிகா நடிப்பில் ‘ஸ்டார்’ திரைப்படத்தை இயக்கினார். ‘ஜோடி’ படத்தின் அளவுக்கு இந்த திரைப்படம் விமர்சனங்களை பெறவில்லை. பின்பு 2007 ஆம் ஆண்டு ‘துள்ளல்’ திரைப்படத்தை இயக்கினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பிரவீன் காந்தி, தமிழ் சினிமாவில் ஜாதி ரீதியான படங்கள் எடுப்பதைப் பற்றி ஆவேசமாக பேசியுள்ளார்.

அவர் கூறியது என்னவென்றால், வளர்ச்சியடைந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில், இப்போது பா. ரஞ்சித், வெற்றிமாறன் போன்றோர்களால் எடுக்கப்படும் ஜாதி ரீதியான படங்களால் தமிழ் சினிமா தளர்ச்சியடைந்துவிட்டது. சினிமாவில் ஜாதியை பற்றி சொல்பவன் ஒழிக்கப்பட வேண்டியவன் என்று பேசியுள்ளார் இயக்குனர் பிரவீன் காந்தி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...