ஜனாதிபதிக்கே கார் தராத நடிகவேள் எம்.ஆர்.ராதா… இறுதியில் எதற்கு பயன்படுத்தினார் தெரியுமா?

பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்…” இது காட்சிக்கான பாடல் மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். அந்த அளவிற்கு இவரைப் போல் இன்னொரு நடிகர் உருவாக முடியாது என்ற முத்திரையை ஏற்படுத்தியவர் எம்.ஆர். ராதா. இவரின் அபாரா நடிப்புத் திறனுக்கு ரத்தக் கண்ணீர் படம் ஒன்றே சாட்சி.

நடிப்பில் உச்சம் தொட்ட எம்.ஆர். எந்த தற்பெருமையும் இல்லாமல் இயல்பாகப் பழகும் குணம் கொண்டவர். மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொண்டவர். எம்.ஆர். ராதா நாடக மேடைகளில் வாழ்ந்தவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் நடித்திராதவர். நாடகக்காரர், பகுத்தறிவுவாதி வசனங்களால் சமூகத்தைக் கூர் தீட்டியவர். சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளார், குடும்பத் தலைவர், சிறைச்சாலைக் கைதி என்று அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆனால் எதிலுமே அவர் அரிதாரம் பூசியதில்லை. ராதா, ராதாவாகவே வாழ்ந்தார்.

திருச்சியில் அவர் வாழ்ந்த வீட்டின் சாக்கடையை அவரே தள்ளுவாராம். ஆள் வைத்து சுத்தம் செய்ய வேண்டியதுதானே என்றால், ’உன் வீட்டுச் சாக்கடையைத் தள்ளலையே, என் வீட்டுதைத்தானே சுத்தம் செய்றேன். வேலையில என்னய்யா ஒஸ்தி மட்டம், எல்லாம் ஒண்ணுதான் போய்யா” என்று தன்மீது கட்டமைக்கப்பட்ட நடிகர் என்ற பிம்பத்தையும் அவரே உடைத்தார்.

செகண்ட் ஹீரோயினாக நடித்த சாவித்திரி… அதே படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகையர் திலகம்

நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது, லட்ச ரூபாய் கொடுத்து இம்பாலா கார் வாங்கினார் எம்.ஆர்.ராதா. அப்போது அது நினைத்துப் பார்க்க முடியாத பெரிய தொகை. ஆனால், அந்த காரில் அவரோ, அவர் குடும் பத்தினரோ சென்றதில்லை. ஒருமுறை, அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், தமிழகம் வந்தபோது பயன்படுத்த, அந்த காரைக் கேட்டி ருக்கிறார்கள். ‘‘இந்த ராதா ஏறவே அந்த காருக்குத் தகுதி இல்லை. அப்புறம் ஏன் அந்த ராதா ஏறணும்?’’ என்று காரைத் தர மறுத்துவிட்டாராம்.

ஆனால், ஜனாதிபதிக்கே மறுக்கப்பட்ட அந்த இம்பாலா காரில் தினம் தினம் வைக்கோல் ஏற்றப்படும். வைக்கோலைப் பிரித்து மாடுகளுக்குப் போட கூடவே வேலையாட்களையும் அதே காரில் அனுப்பி வைப்பார். ‘‘ஏய்… பெயின்ட் அடிச்ச தகரத்துக்காடா இவ்வளவு மதிப்பு? மனுஷனை மதிக்க மாட்றானுங்க. அதனால்தான். அந்த காரோட மதிப்பைக் குறைக்கத்தான் வாங்கினேன்’’ என அதற்கு ராதா செர்ன்ன பஞ்ச் தான் ஹைலைட்டே.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews