செகண்ட் ஹீரோயினாக நடித்த சாவித்திரி… அதே படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகையர் திலகம்

இந்திய சினிமாவில் செகண்ட் ஹீரோவாக இருந்து முன்னணி ஹீரோக்களாக நடித்துப்புகழ் பெற்றவர்கள் ஏராளம். ஆனால் நடிகைகளில் சிலர் மட்டுமே இந்தப்புகழுக்குச் சொந்தக்காரர்கள். உதாரணமாக இப்போதைய காலகட்டத்தில் திரிஷாவைக் கூறலாம். ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக வந்து பின்னர் இன்று வரை தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக ஆண்டு கொண்டிருக்கிறார்.

ஆனால் கருப்பு வெள்ளைப் படங்களில் செகண்ட் ஹீரோயினாக நடித்து பின்னர் அதே படத்தில் நாயகியாக நடித்து இந்திய சினிமா உலகில் ஹீரோக்களுக்கு இணையாகக் கொண்டாடப்பட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்த சாவித்திரிக்கு நடிப்பின்மீது ஆசை. அதற்காக சென்னை வந்த அவருக்கு கிடைத்ததெல்லாம் சிறுசிறுவேடங்கள். பின்னர் இயக்குநர் எல்.வி.பிரசாத் இயக்கத்தில், நாகிரெட்டியின் தயாரிப்பில், என்.டி.ராமாராவுடன் ‘கல்யாணம் பண்ணிப்பார்’ எனும் படத்தில் அறிமுகமானார் சாவித்திரி. தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு அவருக்குக் கிடைத்தது.

மேலும் எல்.வி பிரசாத் இயக்கிய மற்றொரு படத்திற்கு இரண்டாம் கதாநாயகி வேடம் சாவித்திரக்குத் தரப்பட, வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்டர். ஆனால் அந்தப் படத்தில் நடித்த முக்கிய நடிகையால் அதிர்ஷ்டம் அடித்தது. முதல் இருநாட்கள் படப்பிடிப்பிலேயே இயக்குநருக்கும் முக்கிய கதாநாயகிக்கும் கருத்து மோதல் வர, படம் பாதியில் நின்றது. பின்னர் இயக்குநர் ஒரே முடிவாக இரண்டாவது கதாநாயகியை முதல்நாயகி ஆக்கினார். எல்.வி பிரசாத் சாவித்திரி தான் தன் படத்தின் நாயகி என்பதில் தெளிவாக இருந்தார் .

படம் வெளியானபோது அத்தனை அற்புதமாக காதல், குறும்பு, கோபம், சோகம் என அத்தனை பக்கங்களிலும் அசத்தியிருந்தார் சாவித்திரி. எல்.வி பிரசாத் முதல் நடிகையிடமிருந்து எதிர்பார்த்ததைவிடவும் சிறப்பான நடிப்பை திரையில் தெறிக்க விட்டிருந்தார் சாவித்திரி. அந்தப் படம் தான் மிஸ்ஸியம்மா. அத்திரைப்படம் திரையிட்ட இடங்களில் திருவிழா கூட்டம். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு போனார் சாவித்திரி. அடுத்த 20 வருடங்களுக்கு அவரது கால்ஷீட் டைரி நிரம்பி வழிந்தது தனி வரலாறு.

மிஸ்ஸியம்மா திரைப்படம் சாவித்திரியின் திரையுல வாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஜெமினி மீது காதல் கொண்டு திருமணமானவர் எனத் தெரிந்தும் பின்னர் அவரையே கரம் பிடித்தார் நடிகையர் திலகம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.