பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Motorola Moto G14.. என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம்?

மொபைல் போன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களில் ஒன்று மோட்டரோலா என்பதும் இந்நிறுவனம் தயாரித்த பல மாடல்கள் இந்தியா உள்பட பல நாடுகளில் வரவேற்பை பெற்றுள்ளன என்பதை பார்த்தோம். இந்த நிலையில் என்ற மாடல் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த மாடலின் சிறப்பு அம்சங்கள் என்னவாக இருக்கும் என்று கசிந்த தகவல்களை தற்போது பார்ப்போம்

Motorola Moto G14 ஸ்மார்ட்போன் மாடல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான TDRA அமைப்பால் சான்றளிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

Motorola Moto G14 ஸ்மார்ட்போன் என்பது கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட Motorola Moto G13 மாடலுக்கு அடுத்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. G13 ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 செயலி, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனாக இருந்தது. ஆனால் விரைவில் வெளியாக இருக்கும் Motorola Moto G14 ஸ்மார்ட்போனில் அதைவிட அதிக சிறப்பம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது Motorola Moto G14 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 680 பிராஸசர் மற்றும் 6ஜிபி ரேம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 50எம்பி பிரதான கேமரா மற்றும் 13எம்பி அல்ட்ராவைடு கேமராவைக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் செல்பி கேமிராவும் உண்டு.

Motorola Moto G14 ஸ்மார்ட்போன் இன்னும் மோட்டோரோலாவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, எனவே அதன் விலை அல்லது வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் Motorola Moto G13 ஸ்மார்ட்போன் ரூ.9000 என்ற விலையில் விற்பனையானதால் Motorola Moto G14 ஸ்மார்ட்போனும் ரூ.10,000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews