மிதுனம் நவம்பர் மாத ராசி பலன் 2023..!

நவம்பர் மாதத்தில் 10 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்; ராகு- கேது இடப் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. மாதத் துவக்கத்திலேயே குரு பகவான் 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார்.

மிதுன ராசியினைப் பொறுத்தவரை நவம்பர் மாதத்தில் பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் உங்கள் வாழ்க்கையினைத் துவக்குவீர்கள். திருமண காரியம் என்று கொண்டால் குரு பகவானின் இடப் பெயர்ச்சியால் தட்டிப் போன வரன்களும் மீண்டும் தேடி வரும். எதிர்பார்த்தது போல் வரன்கள் அமையப் பெறும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

புதன் பகவான் – செவ்வாய்- சூர்ய பகவான் கூட்டணி அமைத்து இட அமர்வு செய்துள்ளனர். நவம்பர் 11 ஆம் தேதிக்குப் பின் புதன் பகவான் கூட்டணியில் இருந்து பிரிந்து விருச்சிகத்தில் இட அமர்வு செய்கிறார்.

சூர்ய பகவான்- செவ்வாய் பகவான் மீண்டும் 17 ஆம் தேதி புதன் பகவானுடன் இணைகின்றனர். மிதுன ராசிக்கு புதன் பகவான் முழுமையான ஆதாயப் பலன்களைக் கொடுக்கவுள்ளார்; சனி பகவான் அதற்கு ஆதரவாகச் செயல்படுவார்.

ராகு பகவான் உங்கள் வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டங்களை ஏற்படுத்துவார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை நீங்கள் செய்துவந்த முயற்சிகளுக்கு சிறப்பான பலனைக் கொடுப்பார்.

கடந்த காலங்களில் தட்டிப் போன விஷயங்களை ராகு பகவான் நடத்திக் கொடுப்பார். தொழில் வாழ்க்கை என்று கொண்டால் அபிவிருத்தி, புதுத் தொழில் செய்தல் என பல வகையான ஆதாயங்கள் கிடைக்கப் பெறும்.

சுக்கிரன் மாதம் முழுமையும் நீச்சம் அடைந்து கேது பகவானுடன் கூட்டணி அமைக்கின்றார். வண்டி, வாகனங்களில் பழுது ஏற்படும். பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புது வாகனங்களை வாங்கும் முயற்சியில் பலரும் மும்முரமாகச் செயல்படுவர்.

வீட்டில் சிறுசிறு பழுது பார்க்கும் செலவினங்கள் ஏற்படும். ஏதேனும் பொருள் உடையும்பட்சத்தில் அதை நேர்மறையாக எடுத்துக் கொள்ளவும். உங்களின் திருஷ்டிகள் உடைந்து போகும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சுக்கிரன்- கேது பல விஷயங்களில் சில இடர்பாடுகளைக் கொண்டதாகவே இருக்கும். தங்கநகை முதலீட்டை இந்த மாதத்தில் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் ரீதியாகவும் சிறு சிறு தொந்தரவுகள் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews