மிதுனம் மார்கழி மாத ராசி பலன் 2023!

மிதுன ராசி அன்பர்களுக்கு யோகம் நிறைந்த காலகட்டமாக மார்கழி மாதம் இருக்கும். முருகர் வழிபாடு மற்றும் விநாயகர் வழிபாடு செய்து வாருங்கள்; அருகில் உள்ள முருகன் மற்றும் விநாயகர் கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் தவறாமல் சென்று வாருங்கள்.

மகான்கள் வழிபாடு பலவித அனுகூலங்களை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். குடும்பத்தில் மூன்றாம் நபர்களின் தலையீட்டால் பெரும் பிரச்சினைகள் ஏற்படும்; இது பிரிவுக்கு உங்களை இட்டுச் செல்லும்.

அதேபோல் நீங்களும் பிறர் குடும்பம் சார்ந்த விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தல் வேண்டும். பயணங்கள் செய்யும் போது கவனம் தேவை; எதிர்பாலினத்தவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

புதிய கடன்களை வாங்குவீர்கள்; ஆனால் முடிந்தளவு கடன் வாங்குவதைத் தவிர்க்கவும்; இல்லையேல் வாங்கிய கடனை ஆதாயம் தரும் செலவுகளாச் செய்து விடுங்கள்.

எதிரிகள் விஷயத்தில் இருந்த பதற்றம் குறையும்; அனைத்தையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற உறுதி ஏற்படும். வண்டி, வாகனங்களால் நஷ்டங்கள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் ரீதியாக அடிக்கடி பழுது ஏற்பட்டு உங்களுக்குச் செலவுகள் வைக்கும்.

விலைக்கு வாங்குவோர் பழைய வண்டி வாங்குவதைத் தவிர்த்து புது வண்டியினை வாங்குங்கள். இல்லையேல் வண்டி, வாகனங்கள் சார்ந்த நஷ்டங்கள் ஏற்படும்.

கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த பெரும் பெரும் பிரச்சினைகள் தற்போது படிப்படியாகக் குறையும். சுப விரயத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாகக் குறையும். சட்டென்று சுப காரியங்கள் ஏற்படும்.

தாய்வழி உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சரியாகி அவர்கள் ஒன்று கூடி மகிழ்வர். பூர்விகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் சரியாகும். இரத்த உறவுகளுடன் உங்களுக்கு இருந்துவந்த பகைமை உணர்வுகள் சரியாகும்.

மனதில் தெளிவு ஏற்படும். தொலை தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். கோர்ட் வழக்குகள் சார்ந்த விஷயங்களில் தீர்ப்புகள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews