மிதுனம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!

மிதுன ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை புதன் பகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகின்றது. 5 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் ஆட்சி பெற்று அமர்வு செய்துள்ளார்.

புதன் பகவானின் அனுகிரகத்தால் மாணவர்கள் கல்விரீதியாக மிகவும் ஆர்வத்துடன் படிப்பர். போட்டித் தேர்வுகளுக்குச் சிறப்பாகத் தயார் ஆவார்கள். உங்களின் அறிவுக் கூர்மையால் சிறப்பாகத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துவீர்கள். உங்கள் அறிவே உங்களுக்குப் பெரும் ஆயுதமாக இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சுக்கிரன் 5 ஆம் இடத்தில் இருப்பதால் மனதில் உற்சாகம், பூரிப்பு, ஆனந்தத்தினைக் கொடுத்து உங்களை மகிழ்விப்பார். வேலை பார்க்கும் இடத்தில் பலரின் பாராட்டையும் நீங்கள் பெறுவீர்கள். உங்களின் திறமையினை சக பணியாளர்களும், மேல் அதிகாரிகளும் உணரும் காலகட்டமாக இருக்கும்.

தன்னம்பிக்கை அதிகரித்து நீங்கள் உங்களின் கனவு திட்டத்தினைத் தீட்டி அடுத்து கட்டத்தினை நோக்கி நகர்வீர்கள். சூர்ய பகவான் செவ்வாய் பகவானுடன் இணைந்து 6 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். மிதுனத்திற்கு டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை அறிவைத் தீட்டும் மாதம், ஞானத்தினைப் பெறும் மாதம் என்றே கொள்ளலாம்.

தெளிவாகத் திட்டம் தீட்டினால் உங்களின் லட்சியத்தினை நோக்கி சிறப்பாக நடை போடுவீர்கள். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் சிறு சிறு உபாதைகள் இருந்தாலும் பெரிய அளவிலான தொந்தரவுகளுக்கு இட்டுச் செல்லாது.

தொழில் வாழ்க்கை என்று கொண்டால் சிறிய அளவில் முதலீடுகள் செய்து, சிறப்பான திட்டங்களை வகுத்துச் செயல்பட்டால் தொழில் அபிவிருத்தி சார்ந்த விஷயங்கள் வெற்றியினைக் கொடுக்கும்.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் வாழ்க்கைத் துணை உங்களுக்கு பெரும் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறப்புகளுடன் இருந்த மனக் கசப்புகள் சரியாகும். நண்பர்கள் உங்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்வர்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பூர்விகச் சொத்துகளில் இருந்துவந்த இழுபறி நிலையானது சரியாகும். எதிர்த் தரப்பினர் சமாதானத்திற்கு வருவர். பழைய வண்டி, வாகனங்களை மாற்றி புது வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.