சிவக்குமாரின் நல்ல மனதினை மனம்திறந்து பாராட்டிய எம்.ஜி.ஆர்.. இப்போதுள்ள அகரம் பவுண்டேஷனுக்கு அப்பவே அச்சாரம் போட்ட நிகழ்வு

நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தின் வாரிசுகளான நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் தன் தந்தையைப் போலவே ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் உதவிடும் விதமாக அகரம் பவுண்டேஷனை நடத்தி வருகிறார்கள். மேலும் கார்த்தியும் விவசாயிகளுக்கு உதவிடும் விதமாக உழவன் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இப்படி தந்தை மகன்கள் என குடும்பமே சமூகத்தின் வளர்ச்சியில் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்து வருகிறார்கள்.

நடிகர் சிவக்குமாரின் இந்த சமூகத் தொண்டு இன்று நேற்று தொடங்கப்பட்டது அல்ல. கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டதாகும். அப்பொழுது சிவக்குமாரின் 100 வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று சிவக்குமாரின் மற்றொரு அப்பாவித் தனமான நடிப்பை வெளிப்படுத்தியது.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில் பங்கற்பதற்காக அப்போதைய தமிழக முதல்வரான எம்.ஜி.ஆர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் எம்.ஜி.ஆர். ஈன்றபொழுதுதினும் என்ற திருக்குறளை ஆரம்பித்துப் பேசும் போது, சிவக்குமாரை நல்ல மனிதர் என்று சொல்வதற்குக் காரணம் உண்டு. அடிப்படையில் அனைவரும் நல்ல மனிதர்கள் தான். ஆனால் நல்லதைச் செய்து, அதனால் மக்கள் பயனடைந்து மகிழும் போது வரும் வாழ்த்துக்கள் தான் ஒருவரை நல்ல மனிதர் ஆக்குகிறது.

முதல் படத்திலேயே நிராகரிக்கப்பட்ட கவிஞர் சினேகன்.. அதன்பின் அமீர் கொடுத்த வாய்ப்பால் பாடாலாசிரியராக மாறிய கதை

அந்த வகையில் சிவக்குமார் தான் சம்பாதித்த பணத்தனை தேவையில்லாத விஷயங்களுக்குச் செலவழிக்காமல், அதைச் சேர்த்து வைப்பதில் அக்கறை கொண்டு அதில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கையும் வளர்த்து முதன் முறையாக தன்னால் இயன்ற ரூ.25,000 பணத்தினை ஏழைக் குழந்தைகளின் நலனுக்காக செலவழிக்கும் நல்ல உள்ளத்தை சிவக்குமார் பெற்றிருக்கும் போது நல்ல மனிதர் என்ற அடைமொழி அவருக்குச் சொந்தமாகிவிடுகிறது என்று பேசினார்.

இதுபற்றி சிவக்குமார் தனது டைரிக்குறிப்பில், கத்துக்குட்டியான நான் சினிமாவில் நுழைந்த போது எனக்கு ஆசானாக விளங்கியவர்கள் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தான். ரூ. 25,000 பணத்தில் ஒரு டிரஸ் அமைத்து பள்ளிக் கல்வியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் உயர்கல்விக்காக உபகாரச் சம்பளம் கொடுக்கும் திட்டத்தை எனது தாயார் முன்னிலையில் எம்.ஜி.ஆர் துவக்கி வைத்தார். அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இதுவரை அந்த அறக்கட்டளையால் நிதியுதவி கிடைக்கப் பெற்றவர்களில் பலர் கிராமப்புற மாணவர்களே.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறக்கட்டளையின் நீட்சியாகவே அகரம் பவுண்டேஷன் அமைப்பு தற்போது தமிழகமெங்கும் அரசுப்பள்ளிகளைச் சீரமைப்பது, கல்விக்காக நிதியுதவி செய்வது என பல்வேறு வகைகளில் சமுதாயப்பணி ஆற்றி வருகிறது.

Published by
John

Recent Posts