தமிழ் சினிமா கொண்டாடப்படாத ஹீரோ.. தனக்கு வந்த வாய்ப்பினை விஜய்சேதுபதிக்கு கொடுத்து தூக்கிவிட்ட அந்த மனசு..

இன்று பான் இந்தியா ஸ்டாராக விஜய் சேதுபதி திகழ்வதற்குப் பின் அவரின் கடுமையான உழைப்பு இருந்திருக்கிறது. வெளிநாட்டில் வேலை பார்த்து பின் நடிப்பு ஆசையில் கூத்துப்பட்டறையில் இணைந்து நடிப்புப் பயிற்சி பெற்று சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இன்று இந்திய சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என ஆல்ரவுண்டராக் கலக்கி வருகிறார் விஜய்சேதுபதி. ஆனால் விஜய்சேதுபதி முதன்முதலில் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் யாருக்கு வந்த வாய்ப்பு தெரியுமா?

மைனா படம் மூலம் ரசிர்களைக் கவர்ந்திழுத்த நாயகன் விதார்த் நடிக்க வேண்டிய திரைப்படம் தான் தென்மேற்குப் பருவக் காற்று. விதார்த், விமல், பரணி, விஜய்சேதுபதி ஆகியோர் கூத்துப்பட்டறையில் ஒன்றாக நடிப்புப் பயிற்சியைக் கற்றுக் கொண்டவர்கள். இதில் ஒருகட்டத்தில் அனைவருக்குமே சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியது. இன்று அனைவரும் ஒவ்வொரு ஸ்டைலில் நடிப்பில் அசத்திக் கொண்டிருக்கின்றனர்.

இனிமே இப்படி ஷுட்டிங் வந்தா பார்த்துக்கோ..! ரஜினிகாந்த் மீது கடுங்கோபம் கொண்டு எச்சரித்த பாலச்சந்தர்

இந்நிலையில் கூடல் நகர் படத்தினையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி தென்மேற்குப் பருவக் காற்று படத்தின் வேலைகளில் இருந்த போது ஹீரோவாக முதலில் நடிகர் பரணியை அணுகியிருக்கிறார். அப்போது அவர் நடிக்க முடியாத காரணத்தினால் விதார்த்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடிக்க அட்வான்ஸ் முதற்கொண்டு வாங்கிவிட்டார். அப்போது விதார்த்துக்கு மைனா மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்திருந்தது. இந்நிலையில் வேறொரு படம் ஒன்றில் கமிட் ஆனதால் தென்மேற்குப் பருவக் காற்றில் விதார்த் நடிக்க இயலாமல் போக, சீனு ராமசாமி வேறு ஓருவரைத் தேடியுள்ளார்.

அப்போது விதார்த் சீனு ராமசாமியிடம் விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் அவர் விஜய் சேதுபதியிடம், “கதை நன்றாக இருக்கிறது. எனவே நீ கதை கேட்க வேண்டாம். இரண்டு நாளில் ஷுட்டிங் எனவே நீ உடனடியாக ஒப்புக் கொள்” என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அதன்பின் விஜய்சேதுபதியும் ஒப்புக் கொண்டு தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் நடித்தார். இந்தப் படம் விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. ஆனால் விதார்த்துக்கு மைனா படத்தினையடுத்து பல படங்களில் நடித்தாலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்யவில்லை. எனினும் விதார்த்தின் நடிப்பு ஒவ்வொரு படத்திலும் மெருகேறி பாராட்டத்தக்கதாக இருக்கும். ஆனால் அவரின் துரதிர்ஷ்டமோ என்னவோ மைனா போன்று இன்னொரு வெற்றியை அவரால் கொடுக்க இயலவில்லை.

Published by
John

Recent Posts