ஆபிஸ் பாய் to முன்னணி இயக்குநர்.. மாற்றி யோசித்த பாண்டிராஜ்.. மளமளவென கிடைத்த வெற்றி

சினிமாவில் ஓர் நிலையான இடத்தினைப் பிடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்ல. கடுமையான போராட்டங்கள், அவமானங்கள், பசி உள்ளிட்டவற்றைத் தாங்கியே இன்று புகழ்பெற்ற நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் வளர்ந்திருக்கின்றனர். அப்படி சினிமாவில் கடும் போராட்டங்களுக்குப் பிறகு இன்று தனக்கென ஓர் நிலையான இடத்தினைத் தக்க வைத்திருப்பவர்தான் இயக்குநர் பாண்டிராஜ்.

புதுக்கோட்டையில் பிறந்த பாண்டிராஜ் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் ஆபிஸ் பாயாக 1996-ல் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அங்கிருந்து கொண்டே சேரன், சிம்பு தேவன் ஆகியோரின் பழக்கம் கிடைக்க அவர்களது படங்களில் உதவிஇயக்குநராகப் பணியாற்றினார். அதன்பின் சுப்ரமணியபுரம் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் இயக்குநர் சசிக்குமார் தனது கம்பெனி புரடக்ஷன்ஸ் சார்பில் ‘பசங்க’ படத்தினை பாண்டிராஜின் இயக்கத்தில் தயாரித்தார். பாண்டிராஜுக்கு இது முதல்படம்.

‘பசங்க’ படம் எதிர்பார்த்ததற்கும் மேலாக வெற்றியைப் பெற்று விருதுகளை அள்ளிக் குவித்தது. இதில் விமல் ஹீரோவாக அறிமுகமானார். அதனையடுத்து பாண்டிராஜை தயாரிப்பாளர்கள் வட்டமடித்தனர். மேலும 1 கோடி பட்ஜெட் அளவிலேயே பசங்க சாயலில் கதைகள் கேட்டதால் அவற்றை நிரகாரித்தார்.

தமிழ் சினிமா கொண்டாடப்படாத ஹீரோ.. தனக்கு வந்த வாய்ப்பினை விஜய்சேதுபதிக்கு கொடுத்து தூக்கிவிட்ட அந்த மனசு..

இந்நிலையில் அருள்நிதியை நாயகனாக அறிமுகப்படுத்தி வம்சம் படத்தினை இயக்கினார். இப்படமும் வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி மெரீனா படத்தினை ‘பசங்க’ புரடக்சன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கினார். இப்படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் எம்.ராஜேஷ் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒருகல் ஒரு கண்ணாடி என மளமளவென காமடி கலந்த கமர்ஷியல் வெற்றிப் படங்களைக் கொடுக்க பாண்டிராஜின் கவனம் நாமும் இதேபோல் ஒரு முழுநீளக் காமெடிப் படத்தினை எடுக்கலாம் என எண்ணி தான் ஹீரோவாக அறிமுகப்படுத்திய விமல் மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து கேடிபில்லா கில்லாடி ரங்கா படத்தினை இயக்கினார். இந்தப் படம் அவர் நினைத்தது போலவே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

மேலும் கடைசி 20 நிமிடக் காட்சிகளில் அப்பா செண்ட்டிமென்ட் வைத்து ரசிகர்களைக் கலங்க வைத்திருப்பார். இப்படி கமர்ஷியல் பார்முலாவில் புகுந்து கிராம ஆக்சன் படங்களை வரிசையாகக் கொடுத்து இன்று முன்னனி இயக்குநராகத் திகழ்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

Published by
John

Recent Posts