KPY பாலாவுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருது? உண்மையைப் போட்டுடைத்த சினிமா பத்திரிகையாளர்

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு.. என்பது பழமொழி. ஆனால் அந்தப் பழமொழி KPY பாலாவுக்கு பொருந்துகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தான் சம்பாதிக்கும் பணத்தில் 75%க்கு மேல் தான தர்மங்கள் வழங்கியும், தொண்டுகள் செய்தும் சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வு மலர உதவி செய்து வருகிறார்.

பெரிய பெரிய பண முதலைகளே தங்களிடம் இருக்கும் பணத்தில் சிறு துரும்பை மட்டும் தான தர்மங்கள் செய்து பெரிய அளவில் விளம்பரங்கள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில், பாலாவின் இந்த சேவை மனப்பான்மை பலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தாலும், சமூக வலைதளங்களில் இவருக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைக்கிறது என்ற கேள்வியும் கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் குறிப்பிடும் போது, “பாலா ஆரம்பத்தில் தன்னுடைய வருமானத்தின் சிறு சிறு பகுதியை தொண்டிற்காக செலவழித்து வந்தார். அப்போது பலரும் அவரைப் பாராட்டினார்கள். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 25 லட்சம் ரூபாய்க்கு மேல் நலத்திட்ட உதவிகள் செய்துள்ளார்.

இது எப்படி என்ற சந்தேகத்தினைக் கிளப்பி உள்ளது. பலர் தங்களிடம் உள்ள கருப்புப் பணத்தினை இவ்வாறு பாலாவிடம் கொடுத்து செலவழிக்கச் சொல்கிறார்களா அல்லது உண்மையாகவே அவர் சம்பாதித்தது தானா? ஏனெனில் தற்போது ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் படம் ஒன்றில் ஹீரோவாகவும் நடிக்க உள்ளார்.

ஆபிஸ் பாய் to முன்னணி இயக்குநர்.. மாற்றி யோசித்த பாண்டிராஜ்.. மளமளவென கிடைத்த வெற்றி

மேலும் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கிடைக்கும் வருமானத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரிடையாக உதவி கிடைக்கும் வகையில் அவர்களின் வங்கிக் கணக்கிற்கே அவரை புக் செய்த நிறுவனம் வழங்கி விடுமாம். மேலும் சினிமாவில் இதுபோன்று கோமாளித்தனமாக நடித்து வெற்றி பெறுபவர்கள் பின்னாளில் அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ., எம்.பி., போன்ற உயர்பதவிகளை அடைந்தவர்களும் இருக்கிறார்கள். எனவே பாலாவின் இத்தகையை சேவை மனப்பான்மை அவருடைய அரசியல் நுழைவுக்குக் கூட இருக்கலாம்” என்றும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பாலு.

எது எப்படியோ மக்களுக்காக நேர்வழியில் நன்மை செய்யும் ஒருவர் அரசியலில் நுழைந்தால் இன்னும் அதிகமான நன்மைகள் தானே கிடைக்கப் போகிறது. பாலாவின் இந்த சேவை தொடரட்டும்.

Published by
John

Recent Posts