மேடையிலேயே எம்.ஜி.ஆரை விமர்சித்த டைரக்டர்.. கைதட்டி ரசித்த எம்.ஜி.ஆர்.. இவர்தான் அந்த டைரக்டரா?

தமிழ் சினிமாவின் தரத்தை உலகறியச் செய்த இயக்குநர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் என்றால் அது மகேந்திரன் தான். சில படங்கள் மட்டுமே இயக்கிய மகேந்திரன் அத்தனை படங்களையும் முத்தாக்கி தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.

ஆரம்பகாலகட்டத்தில் சினிமா விமர்சகராக, பத்திரிக்கையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய மகேந்திரனை புரட்டிப் போட்ட சம்பவம் நாடோடி மன்னன் பட வெற்றி விழா. விழாமேடையில் எல்லோரும் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேச மகேந்திரனோ எங்காவது காதலிப்பவர்கள் டூயட் பாடியிருக்கிறார்களா? எதார்த்த வாழ்வில் காதலிப்பது எவ்வேளா சிக்கல், ஆனால் இவரோ நாயகியுடன் நான்கைந்து டூயட் பாடிக்கொண்டிருக்கிறார் எனப் பேச எம்.ஜி.ஆர் ஒரு கணம் அதிர்ந்து போனார்.

Mahendran 1

பின்னர் தன்னையும், திரையுலகையும் தைரியமாக விமர்சித்துப் பேசிய மகேந்திரனை விடாமல் பேசச் செய்து சுமார் 45 நிமிடங்கள் வரை கேட்டாராம். இவரின் திரையுலக வாழ்விற்கு இது அடிக்கல்லாய் மாற தொடர்ந்து பல படங்களுக்கு வசனம், திரைக்கதை என எழுதியவருக்கு சினிமா துறை அறவே பிடிக்கவில்லை.

எந்த சினிமாவை இவர் ஒதுக்கினாரோ, ஆனால் அந்த சினிமா இவரைக் கைவிடுவதாக இல்லை. அப்படித்தான்  இவர் எடுத்த படங்கள். மனிதர்களின் எதார்த்த வாழ்வியலை கேமராவில் படம் பிடித்துக் காட்டும் உலக இயக்குநர்களில் மகேந்திரனும் ஒருவர்.

விஜய்யிடம் வாய்ப்புக் கேட்ட ஜெய் : நோ சொல்லி அனுப்பிய தளபதி

இவர் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படத்தை இன்றும் உலக சினிமா விமர்சகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட இந்தப்படம் தான் அதுவரை இருந்த ஹீரோயிசத்தை மாற்றி கதைக்காகத் தான் நடிகர்கள் என்ற நிலையை ஏற்படுத்தியது. பின்னர் இவர் இயக்கத்தில் எவர்கிரீன் கிளாசிக் படமாக வந்ததுதான் முள்ளும் மலரும். கெட்டபய சார் இந்தக் காளி என ரஜினி பேசும் வசனங்கள் அவருக்குள் இருந்த அற்புத நடிகரை வெளிக்காட்டியது. பின்னர் மீண்டும் ரஜினிக்காக இயக்கிய ஜானி படமும் சூப்பர் ஹிட் ரகங்களில் ஒன்று.

மறுபடியும் ரஜினிக்காக கைகொடுக்கும் கை படத்தை இயக்க யதார்த்த இயக்குநர் பட்டியலில் இடம்பிடித்தார் மகேந்திரன். இன்றும் யதார்த்த சினிமா எடுக்க விரும்பும் இயக்குநர்களுக்கு மகேந்திரனின் நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி, அழகிய கண்ணே போன்ற திரைப்படங்கள் ஒரு பாடம் எனச் சொல்லலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...