விஜய்யிடம் வாய்ப்புக் கேட்ட ஜெய் : நோ சொல்லி அனுப்பிய தளபதி

நடிகர் ஜெய் நடித்துள்ள லேபிள் வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக தயாராக உள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கிய இந்தப்படத்தில் ஜெய் வக்கீலாக நடிக்க, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக வந்து இடையில் இறந்து போவார் ஜெய். அதுவரை மென்மையான கதைகளில் நடித்து வந்த விஜய்க்கு ஆக்சன் அவதாரம் கொடுத்த படம் எதுவென்றால் அது பகவதி தான். ஜெய்-க்கும் இது முதல் படமாக அமைந்தது. அதன் பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த 600028 படம் ஜெய்-க்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

Bagavathy

பின்னர் சசிக்குமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மதுரையை கதைக்களமாகக் கொண்டு அரிவாள் கலாச்சாரத்தைத் துவக்கி வைத்த படம் தான் சுப்ரமணியபுரம். ஹீரோவாக இதில் ஜெய் நடிக்க தமிழ் சினிமா இயக்குநர்கள் கண்ணில் நன்கு அறியப்பட்டார். அழகராக இதில் ஜெய் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருப்பார். தொடர்ந்து வாமனன், எங்கேயும் எப்போதும், கோவா, கலகலப்பு, ராஜாராணி,  என ஹிட் படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

ராதாரவியை படாதபாடு படுத்திய மிஷ்கின் : இந்தப் படத்துல இவ்வளவு விஷயம் இருக்கா?

இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் தான் தளபதி விஜய்யிடம் மீண்டும் அவருக்குத் தம்பியாக நடிக்க கேட்டதும், அவர் நோ சொன்னதாகத் தெரிவித்துள்ளார். ஏனென்றால் ஜெய் அப்போது ஹீரோவாக பல படங்களில் நடிக்க மீண்டும் தம்பியாக நடித்தால் அவரது சினிமா வாழ்க்கைக்கு அது சரியாக அமையாது என்றுகூறி நிராகரித்திருக்கிறார் விஜய். விஜய்யின் இந்த முடிவு ஜெய்க்கும்  சரியெனப்பட்டது.

மேலும் பிரபல இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்புகள் கேட்க தயங்கியதில்லை எனவும், உரிமையுடன் கேட்பதாகவும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் ஜெய். ஒரு படம் நடித்து ஹிட் கொடுத்து அடுத்த படத்தில் சம்பளத்தை உயர்த்தி கெத்துக்காட்டும் ஹீரோக்களுக்கு மத்தியில் ஜெய்யே வலியச் சென்று உரிமையுடன் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கேட்பது இளம் தலைமுறை ஹீரோக்களுக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ராஜாராணி படத்திற்குப் பிறது மீண்டும் அன்னபூரணி படத்தில் நயன்தாராவுடன் இணைந்துள்ளார் ஜெய்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews