சிவாஜிக்கு முத்தம் கொடுத்து விட்டு.. நம்பியாருக்கு நோ சொன்ன எம்ஜிஆர்.. அடுத்த நிமிஷமே நடந்த சுவாரஸ்யம்!

சிவாஜி கணேசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘ஜல்லிக்கட்டு’. மணிவண்ணன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் 100 வது நாள் வெற்றி விழா, கடந்த 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றிருந்தது. அப்போது முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். மேலும், நம்பியார், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கூட மேடையில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிகழ்வில் விநியோகஸ்தர் அனைவரும் இணைந்து எம்ஜிஆருக்கு பொன்னாடை போர்த்தினர். மேலும் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆகியோர் படக்குழுவினர்களுக்கு கேடயங்களை வழங்கினர். இதே போல, படத்தின் நடிகர்களான சத்யராஜ், சிவாஜி கணேசன் உள்ளிட்டோருக்கான கேடயங்களை எம்ஜிஆர் வழங்கி இருந்தார்.

அப்படி இருக்கையில், இந்த நிகழ்வில் அனைவரும் எதிர்பாராத வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறி இன்று வரை சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனம் பெற்று வருகிறது. இந்த நிகழ்வின் போது சிவாஜி கணேசனுக்கு பரிசு கேடயத்தை வழங்கிய எம்ஜிஆர், அவருக்கு அன்பு முத்தம் ஒன்றையும் கொடுத்திருந்தார்.

இதன் பின்னர், நம்பியாருக்கு பரிசு கேடயத்தை எம்ஜிஆர் வழங்கி இருந்தார். அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக, தனக்கும் முத்தம் கொடுக்கும் படி, எம்ஜிஆரை அணுகினார் நம்பியார். சிரித்துக்கொண்டே நம்பியார் கேட்ட முத்தத்தை சிரித்துக் கொண்டே மறுத்தார் எம்ஜிஆர். தொடர்ந்து மீண்டும் நம்பியார் முத்தம் கேட்க, இறுதியில் தனது அன்பு முத்தத்தை பரிமாறிக் கொண்டார் எம்ஜிஆர். பல ஆண்டுகளுக்கு முன்பே நடந்த இந்த சம்பவம், தற்போது கூட பலர் கவனத்தை பெறும் வகையில்அமைந்துள்ளது.

அதே போல, எம்ஜிஆர் கலந்து கொண்ட கடைசி திரைப்பட நிகழ்ச்சியும் இது தான். இந்த நிகழ்ச்சி நடந்து சுமார் இரண்டு வாரம் கழித்து புரட்சி தலைவர் எம்ஜிஆர் காலமானது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. எம்ஜிஆர் கடைசியாக பார்த்த திரைப்படமும் சத்யராஜ் நடிப்பில் வெளியான வேதம் புதிது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews