பாட்டு எழுதுனா தான் உனக்கு விடுதலை.. அறையில் வைத்து கண்ணதாசனை பூட்டிய எம்ஜிஆர்.. அப்போ எழுதுன பாட்டு அதிரிபுதிரி ஹிட்..

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் பல திரைப்பட பாடல்கள் வெளியான வண்ணம் இருந்தாலும், அவை ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்க்கும் என்பது தெரியாத விஷயம். சிலருக்கு பிடித்து போகும் பாடல்கள் மற்ற பலரும் விரும்புவார்களா என்பது கேள்விக்குறி தான். ஆனால், ஒரு காலத்தில் கண்ணதாசன் வரிகளில் உருவான பாடல்கள் தற்போது வரை ரசிக்கப்பட்டு வரும் அதே வேளையில், இன்னும் காலம் கடந்து நிற்கக் கூடியவை ஆகும்.

அந்த அளவுக்கு தனது பாடல் வரிகளால் மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படத்தில் பாடல்கள் எழுதி உள்ள கண்ணதாசன், எம். எஸ். விஸ்வநாதன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி என பல முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களிலும் பாடல்களை எழுதி உள்ளார்.

இவர் எம்ஜிஆருடன் ஒரு காலத்தில் மிக நட்பாக இருந்து வந்தார். ஆனால், பின்னாளில் திமுகவில் இருந்து விலகிய கண்ணதாசனுக்கும், எம்ஜிஆருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் அவர்கள் நட்பாக தங்களின் இறுதி காலங்களில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, இன்னொரு பக்கம் எம்ஜிஆர் படங்கள் என்றாலே கண்ணதாசன் தான் பாட்டு எழுதுவாராம்.

அந்த அளவுக்கு அவர்கள் நட்பாக இருந்த நிலையில், ஒரு காலத்தில் மிகவும் பிசியாக இருந்த கண்ணதாசனுக்கு எம்ஜிஆர் படத்தில் கூட பாடல்களை எழுத நேரம் கிடைக்காமல் போனதாக தெரிகிறது. எம்ஜிஆர் நடிப்பில் உருவான தாய் சொல்லை தட்டாதே என்ற படத்திற்காக பாடலை எழுதும் படி கண்ணதாசனை நேரில் சென்று நாடி உள்ளார் எம்ஜிஆர்.

ஆனால், பிசியாக இருந்த கண்ணதாசன் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், அவரை அறையிலேயே வைத்து பூட்டிய எம்ஜிஆர், பாடல் எழுதினால் தான் கதவைத் திறப்பதாக ஜாலியாக கூறி உள்ளார். அந்த சமயத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் தான் ‘சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாள்’ என்ற பாடல். பின்னர் வந்த எம்ஜிஆர், தான் கதவை சாத்த மட்டும் தான் செய்ததாக வேடிக்கையாக கூற, தான் உள்ளே இருந்து எழுதிய அந்த பாடலின் மற்ற வரிகளையும் எழுதினார் கண்ணதாசன்.

மேலும் அந்த பாடலில் தனக்கும், எம்ஜிஆருக்கும் இருந்த நட்பு தொடர்பான வரிகளையும் கண்ணதாசன் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.