மேஷம் சனி பெயர்ச்சி ராசி பலன் 2023-2024!

மேஷ ராசி அன்பர்களே சனி பெயர்ச்சியினைப் பொறுத்தரை சனி பகவான் 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கின்றார். பிள்ளையார்பட்டிக்கு குடும்பத்துடன் சென்று அங்கு அபிஷேகம் செய்துவிட்டு வந்தால் அற்புத பலன்கள் கிடைக்கப் பெறும்.

சனி பகவானின் அமைப்பால் வாழ்க்கையில் நிறைய ஏற்றங்களைக் காண்பீர்கள்.  சுய தொழில் துவங்குதல், கூட்டுத் தொழிலில் இருந்து பிரிந்து தனியாக தொழில் துவங்குதல் என்பது போன்ற விஷயங்களைத் தயங்காமல் செய்யுங்கள்.

வேலைரீதியாக வேலைப்பளு அதிகம் இருப்பதாய் உணர்வீர்கள். சனி பகவானின் பார்வை உங்கள் ராசியில் இருப்பதால் டெக்னாலஜி சார்ந்த விஷயங்களில் நீங்கள் பெயர் எடுப்பீர்கள்.

வேலை செய்யும் இடங்களில் உங்கள் வேலை உண்டு, நீங்கள் உண்டு என்று இருந்துவிடுங்கள். சக பணியாளர்களுடனும் சரி மேல் அதிகாரிகளுடனும் சரி தேவையற்ற நெருக்கம் எதுவும் வேண்டாம்.

பிள்ளைகள் விஷயம் உங்களுக்கு பெரும் அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும், மேலும் நீங்கள் கேட்ட இடங்களில் உங்களுக்கான கடன் கிடைக்கப் பெறும்.

உயர்கல்வி ரீதியாக, தொழில் ரீதியாக அரசாங்கத்தின் கடனுதவிகள் கிடைக்கப் பெறும். வீடு கட்டுதல், கட்டிய வீட்டினைப் புதுப்பித்தல், பாதியில் கட்டாமல் கிடப்பில் போடப்பட்டு வந்த வீட்டினைக் கட்டி முடித்தல் என்பது போன்ற விஷயங்கள் நடந்தேறும்.

வாங்கிய கடன்களை விரயமாகச் செலவழிக்காமல் தேவையான செலவுகளைச் செய்யவும், ஆதாயம் தரும் முதலீடுகளாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்த சனி பெயர்ச்சியில் உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பிக்கவுள்ளதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தாம் தூம் என்று செலவுகளைச் செய்து அவதிப்படாதீர்கள்.

மே மாதம் நடைபெறவுள்ள குரு பெயர்ச்சிக்குப் பின் உங்களின் வாழ்க்கையில் வீண் விரயங்கள் சுப விரயச் செலவுகளாக மாறும். சோர்வினை நீக்கி, தைரியத்துடன் செயல்படுங்கள். உங்களின் உழைப்புக்கு ஏற்ற உயர்வினைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

பிள்ளைகள் ரீதியாகச் செலவினங்கள் ஏற்படும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.