மேஷம் ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு- கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. மேஷ ராசி அன்பர்களே! ராகு பகவான் மேஷ ராசியை விட்டு விலகுகிறார். எதிர்மறையான எண்ணங்கள், கோபங்கள், மன அழுத்தம் எனப் பல வகையான விஷயங்களை கடந்த ஆண்டில் கடந்து இருப்பீர்கள்.

ராகு பகவான் மீனத்திற்குப் பெயர்கின்றார். இது மன நிம்மதி, மனத் தெளிவு போன்றவற்றினைக் கொடுக்கும். மேலும் எடுக்கும் காரியத்தினை தன்னம்பிக்கையோடு செய்து முடிப்பீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மனதில் உள்ள பயத்தினை அப்படியே தூக்கி எறிந்து விடுவீர்கள், 12 ஆம் இடத்திற்குச் செல்லும் ராகு பகவானால் திடீர் வெளிநாடு வாய்ப்புகள் அமையப் பெறும்.

ராகு பகவான் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த பல விதமான மாற்றங்களைக் கொடுத்து உங்களை மகிழ்விப்பார். வேலைவாய்ப்பு என்று பார்க்கையில் திறமைக்கேற்ற கனவு வேலையானது கிடைக்கப் பெறும்.

சுற்றுலா, பொழுதுபோக்கு எனப் பலவகைகளில் உங்களை மகிழ்விப்பார். 7 ஆம் இடத்தில் இருந்த கேது பகவான் அனைத்தும் இருந்தும், எதையும் அனுபவிக்க முடியாமல் செய்து வந்தார்.

குடும்ப வாழ்க்கையில் பல வகையான மனப் போராட்டங்களைச் சந்தித்து வந்தீர்கள்; காதலர்களைப் பொறுத்தவரை இழுபறியாய் உங்கள் வாழ்க்கை இருந்திருக்கும்.

கேது பகவான் 7 ஆம் இடத்தில் இருந்து 6 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். கேது பகவானால் குடும்ப வாழ்க்கையில் கணவன்- மனைவி இடையேயான புரிதல் அதிகரிக்கும்.

மேலும் தொழில்ரீதியாக கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும்; அதற்கேற்றார்போல் பங்குதாரர்கள் உங்களுக்கு அமையப் பெறுவர். எதையாவது செய்து வெற்றி காண வேண்டும் என்ற உத்வேகம் உங்களிடம் அதிகரிக்கும். மேலும் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பல ஆண்டுகளுக்குப் பின் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வருவீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மாணவர்களைப் பொறுத்தவரை ஞானம் அதிகரிக்கும். கிரகங்களின் அனுகூலங்கள் நேர்மறையான எண்ணங்களைக் கொடுக்கும். ராகு- கேது பெயர்ச்சியானது மேஷ ராசிக்குச் சாதகமான இருக்கும் என்பதால் மிகவும் மகிழ்ச்சியுடன் ராகு- கேது பெயர்ச்சியினை வரவேற்கத் தயாராகுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews