மேஷம் நவம்பர் மாத ராசி பலன் 2023..!

நவம்பர் மாதத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்; ராகு- கேது இடப் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. மேஷ ராசியினைப் பொறுத்தவரை குரு பகவான் முதலாம் வீட்டில் உள்ளார். குரு பகவான் பரிபூரணமானவராக உள்ளார்.

நவம்பர் மாதம் மிகத் தெளிவான சிந்தனை கொண்டு இருப்பீர்கள். செவ்வாய் பகவான் துலாம் ராசியில் உள்ளார். செவ்வாய் பகவானுடன் புதன் பகவான் மற்றும் சூர்ய பகவான் இணைந்துள்ளனர்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

முதல் 15 நாட்கள் செவ்வாய் பகவான் குரு பகவான் பார்வையில் உள்ளார். மனதில் உள்ள ஆசைகள் பலவும் நிறைவேறும் மாதமாக இருக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வேலை, இடமாற்றம், பதவி உயர்வு, வேலை நிரந்தம் என்பது போன்ற விஷயங்களை எதிர்பார்க்கலாம்.

வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்த வேலைப்பளு குறையும், மேலும் உயர் அதிகாரிகள் கொடுத்து வந்த அழுத்தம் குறையும், சக பணியாளர்கள் ஆதரவாகச் செயல்படுவர்.

திருமண முயற்சி செய்து வந்தவர்களுக்கு அவர்களுக்கேற்றார்போல் வரன் அமையப் பெறும். ஆனால் திருமணம் சார்ந்த காரியங்கள் கூடி வந்தாலும் திருமண தேதியைக் குறிப்பதைத் தற்போதைக்குத் தள்ளி வைக்கவும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை இதுவரை கருத்து மோதல்கள், பிரிவுகள், மனக் கசப்புகள் என இருந்துவந்த நிலையில் தற்போது கணவன்- மனைவி இடையே சுமூக நிலையானது ஏற்படும்.

வெளியில் சொல்ல முடியாத அளவில் மனக் கஷ்டங்களைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது அவை அனைத்திற்கும் விடிவு காலம் கிடைக்கும் மாதமாக நவம்பர் மாதம் இருக்கும்.

நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் சூர்யன்- செவ்வாய் பகவான் 8 ஆம் இடத்திற்குப் பெயர்ந்து குரு பார்வையில் இருந்து விலகி இட அமர்வு செய்கின்றனர்.

ராகு- கேது விலகுவதால் மிகவும் தெளிவான ஜாதகமாக உள்ளது. சுக்கிரன் விரயச் செலவுகளை ஏற்படுத்துவார். பெரிய அளவில் சேமிப்புகளைச் செய்ய முடியாது. முடிந்தளவு தேவையான செலவுகளைச் செய்து மகிழுங்கள். வாழ்க்கைத் துணையால் அதிக அளவில் செலவுகள் ஏற்படும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சுக்கிரன்- கேது கூட்டணி அமைப்பதால் தான, தர்மங்களைச் செய்யுங்கள். இது உங்களுக்குப் பலவிதமான அனுகூலங்களைக் கொடுப்பதாய் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews