மேஷம் மார்கழி மாத ராசி பலன் 2023!

மேஷ ராசி அன்பர்களே மார்கழி மாதத்தினைப் பொறுத்தவரை குரு பகவானின் வீட்டில் சூர்ய பகவான் இட அமர்வு செய்கிறார்; விநாயகர் அல்லது ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வாருங்கள்; உங்களுக்கு கடவுள் ஆதாயப் பலன்களை ஏற்படுத்திக் கொடுப்பார்.

தெய்வ வழிபாடு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர்கள் மற்றும் வீட்டில் உள்ள பெரியோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்; புதிதாக தேவையில்லாத கடன்களை வாங்காதீர்கள்.

வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் உங்களுக்கு நல்ல நட்பு ஏற்படும். உடல் நலன் சார்ந்த விஷயங்களில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவீர்கள். உடற்பயிற்சி, தியானம், யோகா என உங்களை நீங்கள் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வீர்கள்.

உணவுமுறையில் மாற்றம் செய்வீர்கள்; ஆரோக்கியமற்ற உணவுகளை இதுவரை தவிர்க்க முடியாமல் இருந்துவந்த நிலையில் இனி அதனைத் தவிர்ப்பீர்கள்.

இதுவரை தனிமையில் தவித்துவந்த உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பர்; மேலும் அந்த நண்பர்களால் உங்களுக்குப் பல உதவிகள் கிடைக்கப் பெறும். நண்பர்கள் உங்களுடன் மிகுந்த அக்கறையுடன் நடந்து கொள்வர்.

வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்; பிரிந்த உறவினர்கள் பலரும் ஒன்று கூடுவர். முதலீடுகளுக்கு உகந்த அற்புதமான கால கட்டம் தான் இந்த மார்கழி மாதம். தொழில் சார்ந்த முதலீடுகளைச் செய்து புதுத் தொழில் துவங்கவோ அல்லது ஏற்கனவே இருக்கும் தொழிலை அபிவிருத்தி செய்யவோ செய்யலாம்.

முதலீடுகளால் லாபமும் சந்தோஷமும் அதிகரிக்கும்; பொருளாதார ரீதியாக இருந்த தடைகள் நீங்கி சிறப்பான பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் வயிறு சார்ந்த சிறு சிறு உடல் தொந்தரவுகள் இருக்க வாய்ப்புகள் உண்டு.

குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.