மேஷம் ஜூலை மாத ராசி பலன் 2023!

மேஷ ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் உள்ளார்; சனி பகவான் கும்ப ராசியில் உள்ளார். ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்களின் வேகத்தினை அதிகப்படுத்துவார்;

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை விடாப்பிடியாய் முயன்று வெற்றி பெறுவீர்கள். குரு பகவானின் அசுபப் பார்வை தொழில் ரீதியாக பெரிய அளவில் ஆதாயப் பலனைக் கொடுக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தொழில்ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்; புதுத் தொழில் துவங்க நினைப்போர் தாராளமாகத் தொழில் துவங்கலாம். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலைப்பளு அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். சக பணியாளர்களுடனும் மேல் அதிகாரிகளுடனும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். மேலும் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

மேலும் திருமண காரியங்கள் இதுவரை தள்ளிப் போன நிலையில் இனி திருமண வரன்கள் எதிர்பார்த்ததுபோல் அமையப் பெறும். மாணவர்களைப் பொறுத்தவரை புதன் மிதுன ராசியில் உள்ளார். வெளிநாடு, வெளியூர் சென்று படிக்க ஆசை கொண்டவர்களுக்கு கல்விசார்ந்த கடன் உதவி கிடைக்கப் பெறும்.

பதட்டப்படாமல் எந்தவொரு வேலையினையும் செய்யுங்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியே கிடைக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை பெரிய அளவில் எந்தவொரு பாதிப்புகளும் இல்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews