மேஷம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!

மேஷ ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை சனி பகவான் மற்றும் குரு பகவான் எந்தவித தொந்தரவும் இல்லாமல் இட அமர்வு செய்துள்ளனர்.

ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்குச் சாதகமானதாக உள்ளது. இடையூறு கொடுக்கும் புதன் பகவானால் பெரிய அளவில் தொந்தரவுகள் எதுவும் இருக்காது. சூர்ய பகவான் விருச்சிக ராசியில் செவ்வாய் பகவானுடன் இணைந்துள்ளார். டிசம்பர் 16 ஆம் தேதி சூர்ய பகவான் தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இதுவரை இருந்துவந்த சிறு சிறு தடைகள், தாமதங்கள் டிசம்பர் 2 ஆம் பாதியில் விலகும். மேஷத்தினைப் பொறுத்தவரை செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று அமர்வு செய்துள்ளார்.

சுக்கிரனின் பார்வை ராசியின் மீது விழுகின்றது. நேர்மறையான எண்ணங்களைக் கொண்டு செயல்படுவீர்கள். உங்கள், எண்ணங்கள், சிந்தனைகள் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும்.

முதல் 15 நாட்கள் தடைகள் இருந்தாலும் அதன்பின் தடைகள் விலகி விடுகின்றது. நினைத்தது நடக்கும் காலகட்டமாகக் கொள்ளலாம். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்குச் செய்த கடந்த கால உதவிகளை நினைத்து நெகிழ்வீர்கள்.

கடந்த காலங்களில் கஷ்டங்களைக் கடந்து எவ்வளவு தைரியத்துடன் வென்றீர்கள் என்று நினைத்துப் பார்த்து நீங்கள் மேலும் துணிச்சலுடன் புதிய காரியத்தினைத் துவக்குவீர்கள்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தட்டிப் போன வரன்களும் கூடும். வீடு, மனை வாங்குதல், நிலம் வாங்குதல் என்பது போன்ற விஷயங்களில் மும்முரமாகச் செயல்படுவீர்கள்.

வேலைவாய்ப்பு என்று கொண்டால் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் செல்ல முயற்சி செய்து வந்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். முக்கிய விஷயங்கள் ரீதியாக எதிர்பார்த்த கடனுதவிகள் கை வந்து சேராது.

பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்; பணம் கொடுக்கல், வாங்கல் ரீதியாக வாக்குறுதிகள் எதையும் கொடுக்காதீர்கள். இல்லையேல் பல சந்தரப்பங்களில் அதனைக் காப்பாற்ற முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பிள்ளைகளின் தள்ளிப் போன சுப காரியங்கள் மீண்டும் கைகூடும். இது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.