மேஷம் ஆவணி மாத ராசி பலன் 2023!

மேஷ ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை மேஷ ராசியில் குரு பகவான் உள்ளார். ராசி நாதன் 5 மற்றும் 7 ஆம் இடங்களைப் பார்ப்பதால் கௌரவம், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும்.

ராசியில் ராகு பகவான் இருப்பதால் வீடு, மனை வாங்குதல் போன்ற விஷயங்களில் மும்முரமாகக் களம் இறங்குவீர்கள். 2 ஆம் இடத்து அதிபதி 4 ஆம் இடத்தில் இருப்பது மிக மிகச் சிறப்பு. இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வண்டி, வாகனங்களைப் புதுப்பித்தல், பழுது பார்த்தல் போன்ற விஷயங்களைச் செய்து மகிழ்வீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பழைய வீட்டினைப் புதுப்பிப்பீர்கள். மேலும் வீட்டுக் கடன் சார்ந்த கடனுதவிகளை அடைப்பீர்கள். தாய், தாய்வழி சொந்தங்களால் அனுகூலங்கள் ஏற்படும். சூர்யன் கடகத்தில் இருந்து சிம்மத்தில் இடப் பெயர்வு செய்கிறார். சூர்ய பகவான் குரு பகவானின் பார்வையில் இருப்பதால் பிள்ளைகள் சார்ந்த சுப காரியங்கள் நடந்தேறும்.

மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் இருப்பர். மேலும் ஆசிரியர்களின் பாராட்டுகளையும் நற்மதிப்பினையும் பெறுவர். உயர்கல்வி ரீதியாக எடுக்கும் முடிவுகளை முன் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையினைக் கேட்டு ஆராய்ந்து எடுங்கள்.

குரு மங்கல யோகம் ஏற்படும். கணவன்- மனைவி இடையேயான ஒற்றுமை அதிகரிக்கும். திருமண காரியங்களில் இருந்த இடையூறுகள் சரியாகும். தொழில்ரீதியாக மிகச் சிறந்த பங்குதாரர்கள் அமைவர்; கூட்டுத் தொழில் வெற்றியினைக் கொடுக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குல தெய்வத்தின் அனுகிரகத்தால் எடுக்கும் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். குல தெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.