மேஷம் ஆனி மாத ராசி பலன் 2023!

மேஷ ராசி அன்பர்களே! ஆனி மாதத்தில் வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்த கனவு வேலையானது கிடைக்கப் பெறும். வண்டி, வாகனங்கள் ரீதியாக புதுப்பித்தல் வேலையினைச் செய்வீர்கள். மேலும் மாமனார்ரீதியிலான தொழிலை நீங்கள் எடுத்துச் செய்யும் முயற்சியில் களம் இறங்குவீர்கள்.

வெளிநாடு செல்ல தொடர்ந்து முயற்சித்து வந்தோருக்கு எண்ணிய எண்ணம் ஈடேறும். தந்தைவழியிலான உதவிகள் கிடைக்கப் பெறும். சுய சிந்தனைகள் மேலோங்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சுப காரியங்கள் அடுத்தடுத்து வீட்டில் நடந்தேறும்; குடும்ப உறவினர்கள் ஒன்று கூடுவர். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த பெரும் இடையூறுகள் விலகும்.

புது முயற்சிகளுக்காக நீங்கள் கடன் வாங்கும்பட்சத்தில் கடன் உதவிகள் நிச்சயம் கிடைக்கப் பெறும். உடல் நிலை என்று எடுத்துக் கொண்டால் ஏற்கனவே இருந்தஉடல்நலன் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும்.

மாணவர்கள் கல்விரீதியாக மிகவும் ஆர்வத்துடன் இருப்பர். உடன் பிறப்புகளுடன் மனக் கசப்பு ஏற்படும், குடும்ப உறுப்பினர்களுடனும் சரி வெளியிடத்திலும் சரி வீண் வாக்குவாதம் சிறிய அளவிலான பிரச்சினையையும் பெரும் பிரச்சினையாக்கிவிடும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews