படிக்கும் போது ரூ.65 லட்சத்தில் வேலை.. புனே கல்லூரி மாணவிக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

புனேவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 65 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புனே ஐஐஎம் இன்ஸ்டியூட்டில் படிக்கும் மாணவி அம்பி மல்கோத்ரா. ஜெய்ப்பூரை சேர்ந்த இவரும் இந்த ஆண்டு இறுதி ஆண்டு படித்து வரும் நிலையில் சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அந்த கல்லூரிக்கு கேம்பஸ் இன்டர்வியூ எடுத்தது. இந்த இன்டர்வியூவில் த்து ஆறு சுற்றுகளில் அன்வி மல்கோத்ரா வெற்றி பெற்ற பிறகு அவருக்கு வேலை கிடைத்துள்ளது. ஏற்கனவே அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது இன்போசிஸ் நிறுவனத்தில் முன் அனுபவம் பெற்றதால் அவருக்கு இந்த வேலை உடனடியாக கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு வருடத்திற்கு ரூபாய் 64.61 லட்சம் சம்பளம் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவருக்கு மாதம் ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி அறிவியலில் பி டெக் பட்டம் பெற்ற அன்விக்கு அனைவரையும் ஈர்க்க கூடிய அளவுக்கு மிகப்பெரிய சம்பளத்துடன் கூடிய வேலை கிடைத்துள்ளதால் சக மாணவ, மாணவிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே பல கேம்பஸ் இன்டர்வியூ இந்த கல்லூரிக்கு வந்த நிலையில் சராசரியாக ரூபாய் 16 லட்சம் சம்பளம் தான் மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால் தற்போது சுமார்  65 லட்சம் சம்பளம் என்ற வேலை கிடைத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2021-23 ஆம் ஆண்டுக்கான வகுப்பில், ஐஐஎம் புனே அதன் அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீத இட ஒதுக்கீட்டைப் பதிவு செய்துள்ளது என்று நிறுவனம் ட்வீட் செய்தது. “இந்த ஆண்டு வேலை வாய்ப்பு சீசன் 130+ நிறுவனங்கள் பங்கேற்பு கண்டது, முதல் முறையாக ஆட்சேர்ப்பு செய்பவர்களில் 56 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று நிறுவனம் ட்வீட் செய்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews