மீனம் ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு- கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. மீன ராசி அன்பர்களே! பெயர்ச்சியின்போது யோகக் காரகர் ராகு பகவான் 2 ஆம் இடத்தில் இருந்து 1 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். ஞானக்காரகரான கேது பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார்.

ராகு பகவான் சிந்தனையினை குழப்பிவிடுவார்; மீன ராசியினர் தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டும். மோசமான மனநிலையினை ராகு பகவான் கொடுப்பார். பயம், கோபம், நம்பிக்கையற்ற தன்மை போன்ற குணங்கள் மேலோங்கி நிற்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

ஏனோதானோ என்று முடிவினை எடுக்காமல் எடுக்கும் முடிவுகளில் தெளிவு வேண்டும்; வேலைவாய்ப்பு, தொழில், கல்வி என அனைத்துத் துறைகள் சார்ந்த முடிவுகளை எடுக்கும் போது ஒருமுறைக்குப் பலமுறை பல வகைகளில் ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

இல்லையேல் மோசமான அனுபவங்களைச் சந்திப்பீர்கள்; இது உங்களுக்கு பெரிய மன அழுத்தத்தினைக் கொடுக்கும். புதிய நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனம் தேவை; உங்களைச் சுற்றி இருப்போர் பல வகையில் உங்களைக் குழப்புவர்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் உடல் அளவினைக் காட்டிலும், மனதளவில் பாதிப்புகளைச் சந்திப்பீர்கள். திருமண காரியங்கள் என்று கொண்டால் எதிர்பார்த்தது போன்ற வரன் அமையாது; ஆனால் திடீர் முடிவுகளை மட்டும் எடுத்து விடாதீர்கள். தெளிவுடன் வாழ்க்கைத் துணையினைத் தேர்வு செய்யுங்கள்.

7 ஆம் இடத்து கேது பகவான் அனைத்து வகைகளிலும் உங்களுக்குத் தடைகளையே உண்டு பண்ணுவார். மேலும் உங்களை பல தவறுகளை கேது பகவான் செய்ய வைப்பார், மேலும் செய்த தவறுகளில் இருந்து உங்களுக்குக் கற்றுக் கொடுக்கவும் செய்வார்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

சிந்தித்துச் செயல்படுங்கள்; பொறுமையினை ஆயுதமாகக் கொண்டு செயல்படுங்கள். தொழில் வாழ்க்கையினைப் பொறுத்தவரை கூட்டுத் தொழில் செய்ய நினைப்போர் பங்குதாரர்கள் நன்கு தெரிந்தவர்களாகத் தேர்வு செய்யுங்கள்.

ராகு- கேது பகவானின் இடப் பெயர்ச்சி பெரிதளவில் சாதகமாக இல்லை, எனினும் நீங்கள் பக்குவமாகச் செயல்பட்டு இந்தக் காலகட்டத்தினைக் கடந்து வருவீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews