மீனம் நவம்பர் மாத ராசி பலன் 2023..!

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்; ராகு- கேது பெயர்ச்சியானது நிகழ்ந்துள்ளது. ராகு பகவான் 1 ஆம் இடத்தில் உள்ளார். 12 ஆம் இடத்தில் சனி பகவான் உள்ளார்.

கேது பகவான் 7 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். குரு பகவான் 2 ஆம் இடத்தில் உள்ளார். அனைத்து அசுபக் கோள்களும் உங்களை நெருங்கி வருவதாய் வருத்தம் கொள்ளாதீர்கள். குரு பகவான் உங்களுக்குச் சாதகமாக இருந்து ஆதாயப் பலன்களைக் கொடுப்பார்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

செவ்வாய் பகவான் தற்போது 8 ஆம் இடத்தில் உள்ளார்; நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் 9 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். சுக்கிரன் 7 ஆம் இடத்தில் நீச்சம் பெற்றுள்ளார். சுக்கிரனால் பெரிய அளவில் ஆதாயம் எதுவும் இருக்கப் போவதில்லை; ஏழாம் இடத்துச் சுக்கிரன் உங்களுக்குப் பலவிதமான இடையூறுகளைக் கொடுப்பார்.

மாதத்தின் பிற்பாதியில் 9 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் பகவானுடன் புதன் பகவான் மற்றும் சூர்ய பகவான் கூட்டணி அமைக்கின்றனர். செவ்வாய் மற்றும் புதன் பகவானின் அமைவு உங்களுக்கு ஓரளவு சாதகமானதாகவே இருக்கும்.

குடும்பம், வேலை, தொழில் வாழ்க்கை என உங்கள் வாழ்க்கையினை ஏதோ ஒரு வகையில் சமாளித்து வருவீர்கள். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை பெரிதளவில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்காது. யாரும் உங்களைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் உடலில் சிறு சிறு தொந்தரவுகள் இருக்கும்; ஆனால் அவை நிச்சயம் மருத்துவரீதியான செலவினை ஏற்படுத்துவதாக இருக்கும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வேலைப் பளு அதிகரித்துக் காணப்படும், கவனக் குறைவால்  செய்யும் தவறுகள் தேவையற்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

இந்த நவம்பர் மாதமானது உங்களுக்கு சோதனைக் காலமாக இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தடங்கல்கள் இருந்து கொண்டே இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

இக்கட்டான நேரத்தில் நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு தக்க உதவியினைச் செய்வர். மேலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கப் பெறும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews