மீனம் மார்கழி மாத ராசி பலன் 2023!

மீன ராசி அன்பர்களே மார்கழி மாதத்தினைப் பொறுத்தவரை வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் முருகர் வழிபாடு, பராசக்தி தேவி வழிபாடு செய்துவாருங்கள். முருகர் கோவிலில் பால் அபிஷேகம் செய்து வந்தால் வாழ்க்கையில் சகல வித அனுகூலங்களும் கிடைக்கப் பெறும்.

மகான்களின் வழிபாடு நன்மையினை ஏற்படுத்தும். தொழில் ரீதியாக எடுத்துக் கொண்டால் கடந்த காலங்களில் இருந்துவந்த பாதிப்புகளில் இருந்து மீள்வீர்கள்.

பலருக்கும் தொழில் ஏற்றம் தருவதாய் இருக்கும். புதுத் தொழில் துவங்குதல், இருக்கும் தொழிலைப் புதுப்பித்தல் என்பது போன்ற விஷயங்களைச் செய்வீர்கள்.

தொழில் ரீதியான வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். நஷ்டத்தினை மட்டுமே பார்த்து வந்த உங்களுக்கு தற்போது ஏற்றம் தரும் அதாவது லாபம் தரும் காலகட்டமாக இது இருக்கும்.

வேலை செய்து வந்தவர்களுக்கு சுய தொழில் துவங்கலாம் என்ற எண்ணம் மேலோங்கும். ஏற்கனவே தொழிலால் நஷ்டமடைந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர்களுக்கும் இது ஏற்ற காலகட்டமாக இருக்கும்.

வேலைவாய்ப்பு என்று கொண்டால் வேலையினை இழந்தவர்களுக்கும் அவர்களின் திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ற வேலையானது கிடைக்கப் பெறும். மேலும் இருக்கும் வேலையினை விட்டு வேறு ஒரு வேலைக்கும் முயற்சிக்கலாம். பழைய கடனை அடைப்பீர்கள்.

மாணவர்கள் கல்விரீதியாக மந்தநிலையில் இருந்து தற்போது மேம்பட்டுக் காணப்படுவர். உயர் கல்விரீதியாகத் தெளிவான சிந்தனையுடன் காணப்படுவர். உங்களின் முயற்சி உங்களுக்கு வெற்றியினைக் கொடுப்பதாய் இருக்கும்.

பொருளாதாரம் என்று பார்த்தால் நீங்கள் பிறரிடம் உதவி என்று எதிர்பார்த்த காலகட்டம் போய் உங்களைத் தேடி வருவோருக்கு நீங்கள் உதவி செய்து மகிழும் காலகட்டமாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் மிக மிகக் கவனமாக இருத்தல் வேண்டும்; குறிப்பாக வயிறு மற்றும் செரிமானம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். பழக்கமில்லாத உணவுகள், ஒவ்வாமையினை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews