மீனம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!

மீன ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை 2 ஆம் இடத்தில் குரு பகவான் இட அமர்வு செய்துள்ளார். குரு பகவான் வாக்கு ஸ்தானத்தை வலுப்படுத்துகிறார்.

8 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் இட அமர்வு செய்துள்ளார். அஷ்டமாதிபதி சுக்கிரன் ஆட்சியில் இருப்பதால் விபரீத ராஜயோகத்தினைக் கொடுப்பார். செவ்வாய் பகவான் சூர்ய பகவானுடன் இணைந்து 9 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

10 ஆம் இடத்தில் புதன் பகவான் இட அமர்வு செய்துள்ளார். 12 ஆம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வு செய்துள்ளார். 12 க்குரியவரான சனி பகவான் 12 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. 8 க்குரியவரான சுக்கிர பகவான் 8 ஆம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பது கூடுதல் சிறப்பு.

நீங்கள் எதிர்பாராத பல விஷயங்களும் நடந்து உங்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைக்கும். கடந்த காலப் போராட்டங்கள், வலிகளுக்கு ஆறுதல் தரும் மாதமாக டிசம்பர் மாதம் இருக்கும்.

சுக்கிர பகவான் மூல திரிகோணத்தில் இருந்து உங்களின் ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பார். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை நீங்கள் துணிச்சலோடு புதிய முயற்சியினை செய்வீர்கள். மேலும் அதற்கான பலனை சுக்கிரன் உங்களுக்குக் கொடுப்பார்.

மேலும் தொழில் வாழ்க்கை என்று கொள்கையில் திடீர் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்; நஷ்டத்தில் இருந்து மீண்டு லாபத்துக்குள் அடியெடுத்து வைப்பீர்கள். கடந்த 11 மாதங்களில் துன்பத்தால் துவண்டு போய் இருந்தநிலையில் தற்போது எதிர்பார்க்காத பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொடுப்பார் சுக்கிர பகவான்.

நண்பர்களால் ஆதாயங்கள் ஏற்படும், உடன் பிறப்புகளுடன் இருந்துவந்த மனக் கசப்புகள் சரியாகும். மாணவர்களைப் பொறுத்தவரை புத்திக் கூர்மையுடன் செயல்படுவர். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வீடு, மனை வாங்க நினைப்போர் அதற்கான அட்வான்ஸ் தொகையினைக் கொடுத்து உறுதி செய்வர். மேலும் எதிர்பார்த்த இடங்களில் கடனுதவியானது கிடைக்கப் பெறும்.

அசையாச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகள் சரியாகும்; மேலும் அதனை கைமாற்றி பெரிய அளவில் லாபம் காண்பீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.