தேங்காயின் மருத்துவப் பயன்கள் தெரிந்தால் அசந்து போவீங்க!!

தேங்காய் ஒன்று 10 முதல் 15 ரூபாய்க்கு விற்பனையாவது வழக்கம். ஆனால் இதன் பயன்களோ சொல்லில் அடங்காதவை.

தேங்காய் அதிக அளவில் உள்ள பேட்டி ஆசிட்டானது நம் உடலில் உள்ள நல்ல கொழுப்பினை அதிகரித்து கெட்ட கொழுப்பை விறுவிறுவெனக் கரைக்கச் செய்கின்றது.

தேங்காய் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் நமது தோலின் வறட்சித் தன்மை சரியாகி பளபளப்பான தோலைப் பெற முடியும். உடல் சூடு, 

மேலும் அல்சர் என்னும் குடல் புண் இருப்பவர்கள் தேங்காயில் இருந்து பால் பிழிந்து தினசரிக்கு காலையில் ஒரு டம்ளர் என்ற அளவில் குடித்து வருதல் வேண்டும்.

குழந்தைகளின் உடல் எடையினை அதிகரிக்க நினைப்போர் தேங்காயில் பால் பிழிந்து வெல்லம்போட்டு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கொடுத்துவருதல் நல்லது.

தேங்காயினை வறுத்து சாப்பிடலாம், இது செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது. நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல் என்பது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் தேங்காய்ப் பாலினை எடுத்துக் கொள்ளும்போது அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் சரியாகிவிடும்.

Published by
Staff

Recent Posts