பொழுதுபோக்கு

ஐபிஎல் வரலாற்றிலேயே 4 முறை நடந்த சம்பவம்.. அதில் 2 முறை மும்பை இந்தியன்ஸ் பலிகடாவான பரிதாபம்..

17வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சில யூகங்களின் படி பிளே ஆப் முன்னேறும் அணி பற்றியும், எந்தெந்த அணிகள் வெளியேறும் என்பதையும் ரசிகர்கள் கணிக்க முடியும் அளவுக்கான நிலை தற்போது எட்டியுள்ளது. இன்னும் மிக குறைவான லீக் போட்டிகளே இருப்பதால் அனைத்து அணிகளும் தங்களின் பிளே ஆப் வைப்பை தக்கவைத்துக் கொள்ள என்னவெல்லாம் முடியுமோ அதை எல்லாம் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கும் என்றும் தெரிகிறது.

இதற்கிடையே இந்த சீசனில் முதல் அணியாக மும்பை அணி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய 99% க்கு மேல் இழந்துள்ளதாகவே தெரிகிறது. 11 போட்டிகள் ஆடி முடித்துள்ள அவர்கள் இதுவரை மூன்றில் மட்டுமே வெற்றி கண்ட நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிகளில் என்றால் கூட 12 புள்ளிகள் தான் அவர்களால் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை அவர்கள் இழக்கவில்லை என்றாலும் இன்னும் ஒன்றிரண்டு அணிகள் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் மும்பை அணியின் பெயர் தானாக மறைந்து விடும். அப்படி இதையெல்லாம் தாண்டி மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் மற்ற பல அணிகள் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே தழுவிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அப்படி நடைபெறுவதற்கு அரிதான வாய்ப்பு இருப்பதால் மும்பை அணியின் பிளே ஆப் பறிபோனதை எண்ணி அந்த அணியின் ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு மும்பைக்கு அதிகமாக இருந்தது. 170 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை ஆடிய போது தொடக்க வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்திருந்தனர்.

ஆனால் சூர்யகுமார் தனியாளாக போராடி பார்த்தும் கடைசி கட்டத்தில் கொல்கத்தாவின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட விக்கெட்டுகளையும் அவர்கள் இழந்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியும் அடைந்திருந்தனர். கொல்கத்தா அணியின் வெற்றி அவர்களுக்கான பிளே ஆப் வாய்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது.

இன்னும் ஒரு சில வெற்றிகளை பெற்றால் அவர்கள் நேரடியாக பிளே ஆப்பிற்கு முன்னேறிவிடலாம் என்ற சூழலில் ஐபிஎல் வரலாற்றிலேயே நான்காவது முறையாக ஒரு சம்பவம் இந்த போட்டியில் நடந்ததை பற்றி தற்போது பார்க்கலாம்.

அதாவது ஒரு ஐபிஎல் போட்டியில் இரு அணிகளுமே ஆல் அவுட் ஆவது இது நான்காவது முறை தான். இதற்கு முன்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இரு அணிகளும் ஆல் அவுட்டாகி இருந்தது. அதே போல 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணி மோதிய போட்டியிலும், 2018 ஆம் ஆண்டு மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் மோதி இருந்த போட்டியிலும் இரு அணிகளும் ஆல் அவுட்டாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரு அணிகள் ஒரு ஐபிஎல் போட்டியில் ஆல் அவுட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Ajith V

Recent Posts