ஒரே ஒரு ஆட்டோகிராஃப்-ஆல் மாறிப்போன வாழ்க்கை.. மாதம்பட்டி ரங்கராஜுக்கு ரோல் மாடலான நெப்போலியன்!

இன்று சாதனையாளர்கள் பலரும் தங்களது சாதனைக்குப்பின் ஒரு குறிப்பிட்ட நபரின் வழிகாட்டுதலோ அல்லது அவர்களது சாதனையோ அல்லது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி கொண்டோ உழைத்து தங்களது துறையில் சாதனை படைக்கின்றனர். அந்த வகையில் சினிமா நடிகரான போதிலும் இன்று இந்தியா முழுக்க கோயம்புத்தூர் சமையல் கலையை மணம் பரப்பி வி.வி.ஐ.பி-களின் இல்ல விழாவின் விருந்தில் தமிழ்நாட்டுக் கைமணத்தை பரப்பி வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.

தங்களது குலத் தொழிலான சமையல் தொழிலை தனது தந்தையிடமிருந்து கற்றுக் கொண்டு அதை தற்போது கார்ப்பரேட் ஸ்டைலில் பிஸினஸாக மாற்றி இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சமையல் ஆர்டர்கள் எடுத்து சிறப்புடன் செய்து வருகிறார். மெகந்தி சர்க்கஸ் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்த போதிலும் தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் தங்களது குடும்பத் தொழிலுக்கே திரும்பி இன்று இந்தியாவின் முன்னணி சமையல் கலை நிறுவனமாக்கி அதை திறம்பட செய்து வருகிறார்.

தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்று வரும் மாதம்பட்டி ரங்கராஜ் தனது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த ஓர் தருணத்தை அவர்நினைவு கூறுகையில், “ஒருமுறை எங்கள் பகுதியில் நெப்போலியன், சுகன்யா நடித்த புது நெல்லு புதுநாத்து திரைப்படத்தின் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ரஜினிக்கும் போஸ் வெங்கட்டுக்கும் இவ்வளவு ஒற்றுமையா? ஆட்டோகாரர் to சினிமா பயணம்

அப்போது நெப்போலியனிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக பலர் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். அந்த தருணத்தில் நானும் அங்கே சென்று அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினேன். அப்போது அவருக்குச் சேர்ந்த கூட்டத்தைப் பார்த்து நாமும் வாழ்க்கையில் இப்படி ஓர் இடத்தினை அடைய வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்” என்று கூறியிருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜ் இன்று வீட்டில் தனி ஹெலிபேட் அமைக்கும் அளவிற்கு தனது உழைப்பால் உயர்ந்து இன்று ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கொடுக்கிறார். மேலும் பிரபலங்களின் வீட்டு விசேஷங்கள் பெரும்பாலானவற்றில் இவரது கைப் பக்குவமே ருசிக்க வைக்கிறது. தொடர்ந்து சிறப்புடன் செயலாற்றி தனி ஜெட் விமானம் வாங்கும் அளவிற்கு உயர வேண்டும் என்பது தான் இவரது ஆசை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...