சிஎஸ்கேவில் ஆட விரும்பிய மாயங்க் யாதவ்.. தோனி ஏமாற்றியதால் லக்னோ அணியில் தேர்வானாரா..

17 வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் வைத்து மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த முறை ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இளம் இந்திய வீரர் என்றால் அது நிச்சயம் மயங்க் யாதவ் தான்.

லக்னோ அணிக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு தேர்வாகி இருந்த இவர், அந்த சீசனில் ஒரு போட்டியிலும் ஆடவில்லை. தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் காயத்தால் அவதிப்பட, அந்த முறையும் ஐபிஎல் அறிமுகம் கிடைக்காமல் போனது. அப்படி ஒரு சூழலில், லக்னோ அணியால் இந்த சீசனுக்கு முன்பாக மீண்டும் ஏலத்தில் எடுக்கப்பட்ட மயங்க் யாதவ், அவர்கள் ஆடிய கடைசி இரண்டு போட்டியில் களமிறங்கி இருந்ததுடன் மொத்தம் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதினை வென்றிருந்தார்.

17 வருட ஐபிஎல் வரலாற்றில் எந்த வீரருமே தங்களின் முதல் இரண்டு போட்டியில் ஆட்ட நாயகன் விருதினை வென்றது கிடையாது. அப்படி ஒரு சரித்திர சாதனைக்கு மயங்க் யாதவ் சொந்தக்காரரான நிலையில், இன்னொரு பக்கம் குறைந்தபட்சம் 150 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்தில் தான் அவர் அனைத்து பந்துகளையும் வீசி வருகிறார். அது மட்டுமில்லாமல் தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே 155 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக பந்துவீசி ஐபிஎல் தொடரில் அதிவேக பந்தின் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்து அசர வைத்திருந்தார்.

வேகம் மட்டுமில்லாமல் மிக டெக்னிக்காக ஒவ்வொரு பந்துகளையும் வீசி மேக்ஸ்வெல், கிரீன், பேர்ஸ்டோ என சர்வதேச வீரர்களின் விக்கெட்டுகளையும் அவர் எடுத்துள்ளதால் இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக இடம்பிடிப்பாரா என்ற கேள்வியும் பெரிதாக எழுந்துள்ளது அதேபோல வெளிநாட்டு மைதானங்களில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடர்களில் மாயங்க் யாதவிற்கு வாய்ப்பு கிடைத்தால் பெரிய பங்கை அவர் வகிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில் சமீபத்தில் தான் ஆட நினைத்த அணியை குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார் மயங்க் யாதவ். இது பற்றி அவர் பேசுகையில், “ஏலத்தில் எனது பெயரை சொன்னதும் என்னை எடுக்க சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகள் முனைப்பு காட்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் உட்பட யாருமே என்னை எடுக்காததால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

நான் எதிர்பார்த்த அணிகள் என்னை எடுக்க முயற்சி செய்யாததால் சற்று ஏமாற்றமும் அடைந்தேன்” என மயங்க் யாதவ் கூறி உள்ளார். இதன் பின்னர், இரண்டாவது ரவுண்டில் மயங்க் யாதவை லக்னோ அணி மீண்டும் ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...