இப்படி ஒரு லிஸ்ட்ல பஞ்சாப் கிங்ஸ் மட்டும் தான் இருக்கா.. பெரிய அணிகளையே அலற வைத்த சாம் குர்ரான்..

நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுமே மிக எளிதாக சிறப்பாக பேட்டிங் செய்து வரும் நிலையில் இது முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொடராகவே தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது. இதனால், பும்ரா, சாஹல் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தவே முடியாமல் போய் கொண்டிருக்கிறது ஐபிஎல் தொடர்.

பேட்டிங் செய்யும் அணியில் எட்டாவது வீரர்கள் வரை பேட்ஸ்மேன்களாக இருந்து போட்டியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருகின்றனர். 280 ரன்கள் அடித்தாலும் கூட இனிமேல் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும் என்ற நிலையில் தான் தற்போது ஐபிஎல் தொடரும் மிக வேகமாக பேட்டிங் என்ற ஒன்றை மட்டும் முன்னெடுத்து சென்று வருகின்றது.

அப்படி ஒரு சூழலில் தான் இந்த சீசனில் மற்ற எந்த அணிகளும் செய்யாத ஒரு விஷயத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி செய்துள்ளதை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த சீசனின் ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்கள் அடிக்க வேண்டும் என்பது மிக மிக எளிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படி முதலில் பேட்டிங் செய்யும் அணி, 200 ரன்களை கடந்தாலும் அதனை சேசிங் செய்யும் அணிகள் எளிதாக எட்டிப் பிடித்தும் வருகின்றது.

பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானங்களில் கூட எளிதாக பேட்டிங் செய்யும் அணிகள் 200 ரன்களை கடந்து வருந்து வருவது தொடரும் நிலையில், சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்து முடிந்த போட்டியிலும் கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 200 ரன்களை கடந்திருந்தது. இந்த இரு அணிகளும் அதற்கு முன்பாக மோதி கொண்ட போட்டியிலும் இரண்டு அணிகளும் 250 ரன்கள் கடந்து அசத்தி இருந்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் முதலில் பல சீசன்களில் இருநூறு ரன்கள் அடிப்பதே அசாதாரணமான காரியமாக இருந்த நிலையில் தற்போது அனைத்து அணிகளுமே அதனை எளிதாக செய்து வருகின்றன. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனில் ஆடி வரும் 10 அணிகளில் ஒன்பது அணிகளும் 200 ரன்களுக்கு மேல் எதிரணியினருக்கு கொடுத்து விட்டது.

ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக எந்த ஒரு அணியும் நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை 200 ரன்களை அடிக்கவில்லை. ஆனால், அதே வேளையில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வரும் போட்டியில், 8 ஓவரிலேயே கேகேஆர் 100 ரன்களை கடந்தால் பஞ்சாபின் இந்த அசத்தலான சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி உருவாகலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால், அதே வேளையில், கொல்கத்தா அணி பஞ்சாபிற்கு எதிராக 200 ரன்களை அடித்தாலும் 8 போட்டிகளில் எந்த அணியாலும் முடியாமல் போனதே பெரிது தான் என்றும் அவர்களின் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...