மேட்ச் ஜெயிச்சா கெத்தா.. மும்பைக்கு எதிரா நடந்த மாதிரி வேற எந்த டீம்க்கும் நடக்காத சோகம்..

முந்தைய ஐபிஎல் சீசன்களை விட, இந்த முறை ஐபிஎல் தொடர் மிக அதிரடியாக இருக்கிறது என்று தைரியமாக சொல்லலாம். மேலும் இந்த சீசன் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்தே காணப்படும் நிலையில், சீனியர் வீரர்கள், அறிமுக வீரர்கள் என எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவருமே பட்டையை கிளப்பி வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல் எப்படிப்பட்ட இலக்கை ஒரு அணி அடித்திருந்தாலும் அதனை நோக்கி ஆடும் அணிகள், கடைசி ஓவர்களில் கூட ஏதாவது மேஜிக் செய்து பல அற்புதங்களையும் இந்த ஐபிஎல் தொடரில் அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 192 ரன்கள் குவிக்க, அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்கள் அடித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், மும்பை அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என அனைவரும் கருதினர். ஆனால் மிடில் ஆர்டரில் உள்ளே வந்த சஷாங்க் சிங் 41 ரன்கள் அடித்து அவுட்டாகி இருந்தார். தொடர்ந்து சில போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்து வரும் அசுதோஷ் ஷர்மா, 8 வது வீரராக களமிறங்கி மும்பை அணிக்கு பீதியை ஏற்படுத்தியிருந்தார்.

மொத்தம் ஏழு சிக்சர்களை இவர் பறக்க விட்டிருந்த நிலையில், இரண்டு ஓவர்களுக்கு முன்பாக அவுட் ஆனதால் போட்டியும் முழுமையாக மும்பையின் பக்கம் மாறி கடைசி ஓவரில் அவர்கள் வெற்றியும் பெற்றிருந்தனர். 28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்த அசுதோஷ் ஷர்மா, இன்னும் ஒரு ஓவர் நின்றிருந்தால் போட்டியே பஞ்சாப் பக்கம் தான் திரும்பி இருக்கும்.

இந்த நிலையில் மும்பை இதில் வெற்றி பெற்றிருந்தாலும் மற்ற எந்த அணிகள் செய்யாத ஒரு சம்பவத்தை ஐபிஎல் தொடரில் மொத்தமாக செய்துள்ளது. அதாவது மும்பை அணிக்கு எதிராக எட்டாவது வீரராக களமிறங்கி உள்ள எதிரணி வீரர்கள் மூன்று பேர் இதுவரை 50 ரன்கள் அடித்துள்ளனர்.

ஆனால் அதே வேளையில் மற்ற அனைத்து ஐபிஎல் அணிகளுக்கு எதிராகவே எட்டாவது வீரராக களமிறங்கிய வீரர்கள் மொத்தமாக மூன்று பேர் தான் 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் எட்டாவது வீரருக்கு கொடுத்த ரன்களை விட மற்ற அணிகள் கொடுத்ததும் சமமாக இருப்பது இதில் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews