நடப்பு சீசனில் 400 ரன்கள்.. ஆரஞ்ச் கேப் கோலியோட பேட்டிங்ல இந்த ஒற்றுமையை கவனிச்சீங்களா..

முந்தைய பல ஐபிஎல் சீசன்களை போலவே இந்த முறையும் விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்து வரும் அதே வேளையில் அவரது ஸ்ட்ரைக் ரேட் மீது தான் தற்போது அதிகமாக விமர்சன கருத்துக்களும் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு முன்பாக பல சிறந்த இன்னிங்ஸ்களை டி 20 போட்டிகளில் ஆடி உள்ள விராட் கோலி, இந்த சீசனில் பந்துக்கு ஏற்ற வகையில் பவுண்டரிகளை குறைவாக அடித்து விட்டு ஓடி ரன் எடுக்கும் பழக்கத்தையும் அதிகமாக கையில் வைத்துள்ளார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 40 பந்துகளுக்கு மேல் சந்தித்து தான் அரைச்சதத்தை கடந்திருந்தார் விராட் கோலி. முதல் 12 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்திருந்த கோலி, அடுத்த 29 ரன்களை 31 பந்துகளிலும் எடுத்திருந்தார். இந்த நிலை தொடருமானால் ஆர்சிபி அணியின் ரன் ரேட் மட்டுமில்லாமல் டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரன் குறைவாக அமைவதற்கும் காரணமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இப்படி கோலியை சுற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் இவற்றை எல்லாம் பெரிதாக காதில் போட்டுக் கொள்ளாமல் இந்திய அணிக்காகவும், ஆர்சிபி அணிக்காகவும் நல்லதொரு பங்களிப்பை அவர் தொடர்ந்து அளித்துக் கொண்டே இருப்பார் என்றும் அவரது ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். அது மட்டுமில்லாமல் இந்த சீசனில் நிச்சயமாக ஆயிரம் ரன்களை முதல் ஆளாக ஐபிஎல் தொடரில் தொட வேண்டும் என்பதும் பலரின் விருப்பமாக உள்ளது.

அப்படி ஒரு சூழலில் தான் மிக முக்கியமான ஒரு சம்பவத்தை இந்த சீசனில் செய்து பட்டையை கிளப்பி உள்ளார் விராட் கோலி. முதல் ஆளாக இந்த சீசனில் 400 ரன்களை கடந்துள்ள விராட் கோலி, பல பேட்ஸ்மேன்களுக்கும் தனது ரன்னை நெருங்குவதில் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். அதே போல, இந்த சீசனில் 100, 200, 300 மற்றும் 400 ரன்கள் என அனைத்தையும் கடந்த முதல் வீரராகவும் உருவெடுத்துள்ளார் விராட் கோலி.

இந்த சீசன் முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் நிலையில் பலரும் ரன்னை குவித்து தள்ளினாலும் எந்த வீரராலும் இதனை தொடாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...