டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து திடீரென வெளியேறும் பெண் ஊழியர்கள்.. என்ன காரணம்?

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து பெண் ஊழியர்கள் திடீரென கொத்துக்கொத்தாக வேலையை ராஜினாமா செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டிசிஎஸ் உள்பட பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை கடைப்பிடித்தது என்பதும், ஆனால் அதன் பின்னர் தற்போது மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணி புரிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனம் தற்போது தனது ஊழியர்களிடம் கண்டிப்பாக அனைத்து ஊழியர்களும் அலுவலகம் வந்து பணி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. இதனை அடுத்து அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பெரும்பாலானோர் தங்களது ராஜினாமாவை கொடுத்துள்ளதாகவும் சுமார் 20% ஊழியர்கள் வேலையில் இருந்து நின்று விட்டதாகவும் கூறப்படுகிறது

வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை தொடரவே பெண் ஊழியர்கள் விரும்புகிறார்கள் என்றும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் நிலையில் தற்போது இல்லை என்று அவர்கள் கூறி வருவதாகவும் அதனால் தான் அவர்கள் ராஜினாமா செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் டிசிஎஸ் நிர்வாகம் கண்டிப்பாக ஊழியர்கள் அலுவலகம் வந்து தான் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிசிஎஸ் மட்டுமின்றி உலகின் பல நிறுவனங்கள் தற்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...