மகரம் ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு- கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. மகர ராசி அன்பர்களே! பெயர்ச்சியின்போது யோகக் காரகர் ராகு பகவான் 4 ஆம் இடத்தில் இருந்து 3 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். ஞானக்காரகரான கேது பகவான் 10 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார்.

சனி பகவானால் கடந்த காலங்களில் மிகக் கஷ்டத்தினை சந்தித்து இருப்பீர்கள்; ராகு- கேது பகவானின் இடப் பெயர்ச்சி பலவிதமான கஷ்டங்களில் இருந்தும் உங்களை மீட்டு எடுக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

ராகுவால் அண்டை வீட்டுக்காரர்கள், நண்பர்கள், உறவினர்களால் பல வகைகளிலும் உதவிகள் கிடைக்கப் பெறும். உடன் பிறப்புகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

மேலும் வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் அனுசரணையுடன் நடந்து கொள்வர். சிறிய அளவிலான பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்வீர்கள்.

பழைய வண்டி, வாகனங்களை மாற்றி புது வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். மேலும் கேது பகவானின் பார்வையால் அதிக அளவில் தெய்வ நம்பிக்கை ஏற்படும்.

வேலை செய்யும் இடங்களில் வேலைப்பளு குறைந்துள்ளதாக உணர்வீர்கள்; மேலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் உங்களுக்கு மகிழ்ச்சியினைக் கொடுக்கும்.

ராகு பகவான் கைக்கு எட்டும் தூரத்தில் பலனைக் கொண்டு வருவார்; கேது பகவான் நமது புத்தியினை தெளிவு படுத்துவார். அறிவு சார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள்.

ராகு- கேது பகவான் இருவரும் உங்களைப் பெரிதாய் கெடுக்க போவதில்லை. அதுபோல் பெரிதளவில் கொடுக்கவும் போவதில்லை; அனைத்தையும் உங்கள் அருகாமையில் வைத்து விடுவர்; உங்களின் முயற்சியால் நீங்கள் அதனை அடையலாம்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உங்களுக்குத் தேவையான விஷயங்களை நோக்கி முயற்சியினைச் செய்யுங்கள்; நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். மேலும் குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே நிலவிய பலவிதமான பிரச்சினைகளும் சரியாகும்.

அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செவ்வாய்க் கிழமை சென்று வழிபாடு செய்து வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews