மகரம் மார்கழி மாத ராசி பலன் 2023!1

மகர ராசி அன்பர்களே மார்கழி மாதத்தினைப் பொறுத்தவரை காளி வழிபாடு, ப்ரத்தியங்கரா தேவி வழிபாடு செய்துவந்தால் வாழ்க்கையில் அனைத்து போராட்டங்களையும் நீங்கள் சமாளித்து வாழ்வீர்கள்.

தொட்டது துலங்கும் காலகட்டம் என்பதால் பணவரவு திடீரென்று ஏற்படும். திடீரென்று பழைய கடன்களை அடைப்பீர்கள். பலருக்கும் திடீர் ராஜயோகம் ஏற்படும். திடீர் ஏற்றங்களை உங்கள் வாழ்க்கையில் பார்ப்பீர்கள்.

நீங்கள் பல ஆண்டுகள் கண்ட கனவானது நனவாகும் மாதமாக மார்கழி மாதம் உங்களுக்கு இருக்கும். நிலம் வாங்குதல், விற்பது என்பது போன்ற விஷயங்களில் மும்முரம் காட்டுவீர்கள்.

வீடு வாங்குதல், வீடு கட்டுதல் என்பது போன்ற நீண்ட நாள் கனவு கண்டு இருந்தவர்களுக்கு இது தங்களின் கனவு நிறைவேறும் காலகட்டமாக இருக்கும். வங்கிகளில் நீங்கள் எதிர்பார்த்திருந்த கடனுதவிகள் மானியத்துடன் கிடைக்கப் பெறும். தொழில் சார்ந்த முதலீடுகளைச் செய்வீர்கள்.

இருக்கும் தொழிலை அபிவிருத்தி செய்தல், தொழில் மாற்றம் செய்தல், புதுத் தொழில் துவங்குதல் என உங்கள் தொழில்ரீதியாக பல மாற்றங்களைச் செய்வீர்கள்.

எதிரிகளின் விஷயத்தில் இருந்த பதட்டம் குறையும். வேலைவாய்ப்பு என்று கொண்டால் மேல் அதிகாரிகளின் பாராட்டு, பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கப் பெறும்.

உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொந்தரவுகள் படிப்படியாகக் குறையும். ஆனாலும் தினசரி உடற்பயிற்சி செய்தல், தியானம், யோகா என உங்கள் வாழ்க்கையினை ஆரோக்கியமானதாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.

உடன் பிறப்புகளுடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்; இளைய சகோதரருடனான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் கல்விரீதியாக தேவையான கடனுதவிகள் கிடைக்கப் பெறும். பிள்ளைகள் உயர் கல்வி ரீதியாக வெளிநாடு, வெளியூர் செல்வர். மேலும் போட்டித் தேர்வுகளில் பலரும் தேர்ச்சி பெறுவர்.

பொதுவாகவே இந்த மாதம் முழுமையும் உங்கள் தன்னம்பிக்கையானது அதிகரித்துக் காணப்படும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.