மகரம் ஜூலை மாத ராசி பலன் 2023!

மகர ராசி அன்பர்களே ஜூலை மாதத்தினைப் பொறுத்தவரை போராட்டம் நிறைந்த வாழ்க்கையால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை பெரிய அளவில் திருப்தியில்லாமல் இருப்பீர்கள். புது வேலைக்கு முயற்சிக்கும் எண்ணம் இருந்தால் தற்போதைக்கு அனைத்துத் திட்டங்களையும் தள்ளி வையுங்கள்.

பணம் சார்ந்த முதலீடுகளில் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது; மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும். குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை சிறு சிறு தேவையில்லாத பேச்சுகளும் பெரிய அளவிலான குடும்பப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்ப உறுப்பினர்கள்ரீதியான பொறுப்புகள் அதிகரிக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை தற்போதைக்கு மிகப் பொறுமையுடன் காத்திருத்தல் வேண்டும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மிகவும் ஆர்வத்துடன் செயல்படுவர். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு புகழ் கிடைக்கும். தொழில்ரீதியாக அனுபவம் இல்லாத தொழிலில் கால் பதிக்கக் கூடாது. ஒரு பிரச்சினை முடியும் முன்னே அடுத்த பிரச்சினை வரும்; தைரியத்துடன் எந்தவொரு பிரச்சினையினையும் எதிர்கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை பெரிய அளவில் தொந்தரவுகள் இருக்காது; ஆனால் மனரீதியாக உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இது உங்களுக்கு உடல் கோளாறுகளை ஏற்படுத்தும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

ஏமாற்றங்கள், தோல்விகள் நிறைந்த மாதமாக இருக்கும்; குடும்பத்துடன் குல தெய்வக் கோவிலுக்குச் சென்று வாருங்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.