மகரம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!

மகர ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை மிகவும் வலுவான நிலையில் இப்போது உள்ளீர்கள். சூர்ய பகவான் செவ்வாய் பகவானுடன் இணைந்து 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். சுக்கிர பகவான் ஆட்சி பெற்ற சுக்கிரனாக அமர்வு செய்துள்ளார்.

எதிர்காலம் குறித்த திட்டங்களைச் சிறப்பாக வகுப்பீர்கள்; மேலும் நீங்கள் எந்தவொரு காரியம் சார்ந்தும் எடுக்கும் முடிவுகளும் ஜெயத்தினைக் கொடுப்பதாய் இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உங்களின் மனநிலை மிகவும் உறுதியாக இருக்கும். செய்யும் விஷயத்தினை முழு மனதுடனும், முழு ஈடுபாட்டுடனும் செய்து முடிப்பீர்கள். உங்களின் போராட்டத்திற்கு ஏற்ற வெற்றியினை தற்போது ருசி பார்ப்பீர்கள். நினைத்ததை செய்பவராகவும் நினைத்ததை முடித்தே காட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராகவும் இருப்பீர்கள்.

கிரகங்கள் உங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது, நீங்கள் செல்லும் பாதையில் நீங்கள் மிகவும் தெளிவாக இருப்பீர்கள். உங்களை நீங்களே பல தருணங்களில் சரி செய்து கொள்வீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும்.

அடுத்த ஆண்டு குறித்த உங்களின் திட்டம் சிறப்பானதாக இருக்கும். சுக்கிர பகவான் மிகவும் அதிர்ஷ்டம் தரும் சுக்கிர பகவானாக உள்ளார். பொருளாதாரம் என்று கொண்டால் சிறப்பான அளவில் இருக்கும். உடல் ஆரோக்கியம் என்று பார்க்கையில் பெரிய அளவிலான உடல் தொந்தரவுகளில் இருந்து மிள்வீர்கள்.

மேலும் உறவுகளுக்குள் பல ஆண்டுகளாக இருந்துவந்த பிரச்சினைகள் சரியாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிறு சிறு கவனம் தேவை. தொழில்ரீதியான ஏற்றம் ஏற்படும், சிறு சிறு செலவுகளைச் செய்து தொழிலை அபிவிருத்தி செய்யலாம். வாடிக்கையாளர்கள் படிப்படியாக அதிகரிப்பர்.

தாய்வழி உறவினர்களால் பல வகையான உதவிகள் கிடைக்கப் பெறும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை எதிர்பார்த்தது போன்ற வரன் உங்களைத் தேடி வரும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாகச் சிறந்து விளங்குவர்; உயர்கல்வி ரீதியாக மிகவும் ஆர்வத்துடனும் தெளிவான சிந்தனை கொண்டும் செயல்படுவர்.

பூர்விகச் சொத்துகளில் இருந்த பிரச்சினைகளின் முடிவுகள் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.