ஆடி மாதம் பிறந்தாச்சே!ஆடி தேங்காய் சுட்டு வழிபட்டாச்சா?!

By Staff

Published:

ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு…என பல கொண்டாட்டங்கள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்டாலும் ஈரோடு, சேலம், தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் ஆடி முதல் நாள் கொண்டாட தனியாய் ஒரு பண்டிகை உண்டு. அதன் பெயர் தேங்காய் சுடும் பண்டிகை..

தேங்காய் சுடும் பண்டிகையின் விவரம் அறிவோம்…

இந்த தேங்காய் சுடும் பண்டிகை தோன்றியது மகாபாரத காலத்தில்…, அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ந் தேதி தொடங்கி 18 நாட்கள் தொடர்ந்து ‘ஆடி18 அன்று முடிவுக்கு வந்ததாம். அதர்மத்திற்கெதிரான போரில் தர்மம் வெல்ல வேண்டுமென்று, போர் தொடங்கும் நாளன்று, அதாவது ஆடி மாதம் முதல் நாளன்று பாண்டவர் படையை சேர்ந்த வீரர்கள்,  விநாயகர் மற்றும்  அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கும், குல தெய்வங்களுக்கும் பூஜை செய்து தர்மம் ஜெயிக்க வேண்டுமெனவும், தாங்கள் பத்திரமாய் வீடு திரும்ப வேண்டுமெனவும் வேண்டிக்கொள்ள முடிவெடுத்து பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தார்களாம். போர்க்களத்தில் பாத்திரம் ஏது?! காய்கள்தான் ஏது?! கைக்கு கிடைத்த தேங்கய்க்குள் அரிசி, வெல்லம், எள், ஏலக்காய், உப்பு சேர்த்து நெருப்பில் சுட்டு, அதை இறைவர்களுக்கு படைச்சு, போரில் வென்றதால் அன்றிலிருந்து ஆடி 1 அன்னிக்கு இப்படி தேங்காய் சுடும் பூஜை உண்டானதாம்….

96623c69ee60f1d74b8c4018e7bf05ec

முற்றிய தேங்காயினை எடுத்து, நன்றாக மழுமழுவென வருமளவு தேய்த்து(சபரிமலைக்கு இருமுடி கட்டும்போது தேங்காயினை தேய்ப்பதுபோல்), முக்கண்ணில் ஒரு கண்ணினை தோண்டி, உள்ளிருக்கும் நீரினை வெளியேற்றி, பச்சரிசி, நாட்டு வெல்லம், வறுத்த எள், உடைத்த பச்சைப்பயிறினை முக்கால் பங்கும், தேங்காயிலிருந்து வெளியேற்றிய நீர் கால்பங்கும் சேர்த்து தேங்காய்க்குள் திணித்து, அழிஞ்சில் குச்சியை சீவி, திறந்த தேங்காய் கண்ணில் சொருகி, மஞ்சள் பூசி நெருப்பினில் சுடவேண்டும்.

8a04eba7f25f65c8c19edbad919330bf

சுட்ட தேங்காயை கோயிலுக்கு எடுத்துக்கொண்டு போய் உடைத்து , சாமிக்கு வைத்து வழிபடனும். தேங்காயில் நாட்டுச்சர்க்கரையின் ருசி ஏறி, எள், தேங்காய் வாசனையோடு மணமும் ருசியுமாய் அமர்க்களமாய் இருக்கும். அந்த பண்டத்தினை போலவே தங்கள் வாழ்வும் இனிப்பு மணமும் கொண்டதாய் இருக்குமென அவர்களின் நம்பிக்கை…

14a81b8d5865584a6b312d8d77a88b96

அனைவருக்கும் ஆடி 1 வாழ்த்துக்கள்

Leave a Comment