ஆயிரம் சூரியன் முன்னால் வந்து நின்ன மாதிரி.. எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்த கன்னடத்து பைங்கிளியின் அனுபவம்!

தமிழ்த் திரையுலகில் 1960-70 காலகட்டங்களில் சாவித்திரி, பத்மினி, ஜெயலலிதா ஆகிய முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக விளங்கியவர்தான் சரோஜா தேவி. கன்னடத்து பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்படும் சரோஜாதேவி கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இளம் வயதிலேயே துறுதுறுவென அழகாக இருந்த சரோஜாதேவியை அவரது தாய் சினிமாவில் வாய்ப்பு தேடுமாறு அறிவுறுத்த அதன்படி முதன் முதலில் கன்னட படமான ‘மகாகவி காளிதாஸ்’ படம் மூலமாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் நுழைந்து எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என மூவருடனும் நடித்து தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை அடைந்தார்.

”எரியுதுடி மாலா.. Fan-அ பனிரெண்டாம் நம்பர்ல வைய்யி…” வடிவேலு அட்ராசிட்டியால் களைகட்டிய ‘மிடில்கிளாஸ் மாதவன்’ ஷூட்டிங்

இவர் எம்ஜிஆருடன் மட்டும் கிட்டத்தட்ட 26 படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசனுடன் 22 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் தான் முதன் முதலாக எம்ஜிஆரை சந்தித்த தருணத்தினைப் பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் சரோஜா தேவி. 1955-ல் கன்னடத்தில் வெளியான ‘கச்ச தேவயானி’ படத்தில் சரோஜாதேவி நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கை பார்க்க எம்ஜிஆர் அப்போது ரேவதி ஸ்டூடியோ வந்துள்ளார். எம்ஜிஆரைக் கண்ட அனைவரும் அவரை பார்த்து எழுந்து நின்று வணக்கம் சொல்லி இருக்கின்றனர். அப்போது சரோஜாதேவி 1000 சூரியன் தன் முன்னால் வந்து நின்றால் எப்படி இருக்குமோ அதே போன்று எம்ஜிஆரை சந்தித்த தருணம் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

மேலும் இயக்குனர் எம்ஜிஆரிடம் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தி வைக்க, அப்போது எம்ஜிஆர் அவரிடம் கன்னடத்தில் நலம் விசாரித்திருக்கிறார். அதன் பின் ‘திருடாதே’ படம் உருவான போது அதில் அவருக்கு ஜோடியாக நடித்தார். எனினும் ‘நாடோடி மன்னன்’ படம் சரோஜா தேவியை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. ‘திருடாதே’ படப்பிடிப்பில் சரோஜாதேவிக்கு காலில் கண்ணாடி கிழித்து காயம் ஏற்பட எம்ஜிஆர் தக்க சமயத்தில் புதுமுகம் என்றும் பாராமல் அவர் காலை தன் மடியில் தாங்கி முதலுதவி செய்திருக்கிறார். அன்றிலிருந்து எம்ஜிஆரை அன்பு தெய்வமாக மனதில் வைத்து போற்றியிருக்கிறார் சரோஜாதேவி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...