கும்பம் ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு- கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. கும்ப ராசி அன்பர்களே! பெயர்ச்சியின்போது யோகக் காரகர் ராகு பகவான் 3 ஆம் இடத்தில் இருந்து 2 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். ஞானக்காரகரான கேது பகவான் 9 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார்.

வாக்குக் கொடுக்கும்போது மிகக் கவனத்துடன் இருத்தல் வேண்டும்; கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற முடியாத சூழல் உங்களுக்குப் பெரிய அளவில் மனக் கஷ்டத்தினைக் கொடுக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

முதலீடுகளைச் செய்யும் போது மிகக் கவனம் தேவை. முதலீடுகள் சார்ந்த அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடையாது; வேலை செய்வதன் மூலம் உங்களுக்குப் பணம் கிடைக்கப் பெறும்.

தொழில் சார்ந்து அபிவிருத்தி முடிவுகளை தற்போதைக்குச் செய்யாதீர்கள்; அதேபோல் கூட்டுத் தொழிலும் மிகக் கவனம் தேவை. ராகு பகவானால் யோகம் இல்லாவிட்டாலும் தோஷம் இல்லாமல் இருந்தால் போதும் என்ற அளவில் கும்ப ராசிக்காரர்களின் மனநிலையானது இருக்கும்.

பணம் கொடுக்கல், வாங்கலில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும். மேலும் கடன்களை வாங்கும்போது மிகக் குறைவான அளவில் வாங்குங்கள்; எளிதில் அடைக்கக்கூடிய வகையிலான கடன்களையே வாங்குங்கள்.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையேயான தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்படும். மேலும் எந்தவொரு விஷயத்தினைச் செய்யும்போதும் கவனத்துடன் செயல்படுதல் வேண்டும்.

நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளும் பெரும் தவறுகளாய் பிரதிபலிக்கும். சிறு சிறு வாக்குவாதங்களும் பேசி பேசியே பெரும் பிரச்சினைகளாக உருவெடுக்கும்.

பயணங்களை மேற்கொள்ளும் போது மிகக் கவனமாக இருத்தல் வேண்டும்; வண்டி, வாகனங்களை வாங்க நினைக்கும் இளைஞர்கள் பெற்றோர் பெயரில் வாங்குங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் திடீர் உடல் தொந்தரவுகள் ஏற்படும்; அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமல் கஷ்டப்படுவர், மேலும் கணவன் குடும்பத்தாரால் மன நிம்மதி குறையும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews